கேரளாவில் வெளுத்த மழை- இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூருக்கு ரெட் அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கேரளாவில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வெளுத்தெடுத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியது இதனால் சிறுதோணி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கேரளாவில் சில பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திரும்பிய திசை எங்கும் வெள்ளம்தான். தற்போது, மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் நிரம்பிய நிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கிய மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டும் வருகின்றனர்.
கன்னியாகுமரி வெள்ள பாதிப்பு தொடர்பாக இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சென்னை மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டால், கன்னியாகுமரி மாவட்டம் கடந்த மூன்று வாரங்களாக, ஒரு சில நாட்கள் தவிர, தொடர் மழையை அனுபவித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் பெய்த மழையை விட, நான்கு நாட்களாக பெய்து வரும் மழை பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது; இன்னும் ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தார்.
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம். ற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என்பது வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?











Click it and Unblock the Notifications