Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

15 விஐபிகள் பிடியில் பிரபல நடிகைகள்.. சொல்றதை மீறினால் "காலி".. திகிலடிக்கும் மலையாள சினிமா

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இதையடுத்து, மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது?

கடந்த 2017ம் ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்... இது தொடர்பான வழக்கில், முன்னணி நடிகர் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.. இவருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.. இந்த வழக்கு கேரளாவில் இன்னமும் நடந்து வருகிறது.

Hema commission report Kerala Film Industry

இந்த சம்பவத்துக்கு பிறகு, மலையாள சினிமா துறையில் சம்பந்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள் நிறைய நடப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்த நிலையில், கேரள நடிகைகள், மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரித்து, அறிக்கை வழங்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.

அறிக்கை எங்கே?: மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்து ஆய்வு செய்யவே இந்த ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.. இதையடுத்து, கடந்த 2019, டிசம்பர் மாதமே, இந்த குழுவானது தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்து விட்டது.. ஆனாலும் கேரளா அரசு அதனை இதுவரை வெளியிடாமலேயே இருந்தது..

இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்ய, அரசு இன்னொரு குழுவை அமைத்து காலம் தாழ்த்துகிறது என்றும், அந்த அறிக்கையில் பல முன்னணி நடிகர்கள் பற்றிய ரகசியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்றும் சலசலப்புகள் கிளம்பின.

குற்றச்சாட்டுகள்: 2 வருடங்களுக்கு முன்பே இதை பற்றி பிரபல நடிகை பார்வதி, நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே பேசியிருந்தார்.. "இந்த அறிக்கையை கேரள அரசு முடிந்தவரை முடக்க முயற்சிக்கிறது... இப்படியே 3 வருஷம் ஓடிவிட்டது.. இன்னும் அறிக்கை வெளியாகவில்லை.. அறிக்கையை இறுதி செய்து 3 ஆண்டுகள் ஆகியும் வெளியிடப்படவில்லை.. அதற்கு பதிலாக, இந்த அறிக்கையை ஆய்வு செய்ய இன்னொரு குழு அமைக்கப்பட்டுள்ளது.. பிறுகு, 5 வருஷம் கழித்து இன்னொரு குழு அமைக்கப்படலாம்

நீங்க வேணும்னா பாருங்க.. கேரளாவில் தேர்தல் வந்ததுமே, இந்த அறிக்கை திடீரென வெளியே வரும். பெண்களுக்கு ஆதரவான அரசாக இது உடனே மாறும்.. இது என்னுடைய கணிப்பு. அதனால், தேர்தல் வரும் வரை காத்திருப்போம். எப்படியோ, அறிக்கை வெளிவந்தால், மலையாள திரையுலகில் நாம் கொண்டாடி கொண்டிருக்கும் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழியும் "என்று காட்டமாக கூறியிருந்தார்.

பார்வதி: பார்வதி அன்று இப்படி பேசியிருந்தது, மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.. உண்மையிலேயே அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது? இப்போது அறிக்கை தயாராகி நான்கரை வருடமாகிவிட்ட நிலையில், இன்னும் ஏன் வெளியிடப்படவில்லை? நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்கள் இருப்பதால்தான், நான்கரை வருஷமாக மாநில அரசு வெளியிடாமல் உள்ளதா? என்றெல்லாம் சந்தேகங்கள் கிளம்பின.

இந்நிலையில், நான்கரை வருட காலமாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.. 233 பக்கங்களைக் கொண்ட நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு இன்று வெளியிட்டிருக்கிறது. தகவல் உரிமை ஆணையம் தலையிட்டு, சர்ச்சைகுரிய விஷயங்களை தவிர்த்து விட்டு பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்றைய தினம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை: அந்த அறிக்கையில், மலையாளத் துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட மொத்தம் 15 ஆண் பிரபலங்களின் பிடியில்தான், மொத்த மலையாள சினிமாவும் அடங்கியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கமானது, மலையாள சினிமாவில் அதிகமாகவே பரவியிருக்கிறது. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி நடிகைகளை, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகிறார்கள்.. பாலியல்ரீதியாக இணங்கும் நடிகைகளை ஒத்துழைக்கும் நடிகைகள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க நடிகைகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.. இதற்கு மறுத்தால் மிரட்டப்படுகிறார்கள். நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்ட லிஸ்டில் ஏராளமான முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.. பாலியல் ரீதியாக ஒத்துழைக்க மறுக்கும் நடிகைகளுக்கு சோஷியல் மீடியாவில் தொல்லைகள் தரப்படுகின்றன.

சினிமாவில் எந்த நடிகைகள் இருக்க வேண்டும், எந்த நடிகையை, படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் மிக்க குழுவாக இந்த 15 பவர்ஃபுல் பிரபலங்களும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்" என்றெல்லாம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

துன்புறுத்தல்கள்: அதுமட்டுமல்ல, நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட தொழில்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பற்றிய துன்புறுத்தல் விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. யாரெல்லாம் பாலியல் டார்ச்சருக்கு உள்ளாகிறார்களோ, அவர்கள் உயிருக்கு பயந்து போலீசுக்கும் செல்லாமல் தயங்குகிறார்களாம்.

இதைத்தவிர, ஊதிய முரண்பாடுகள் நிலவுவதாகவும், சினிமா தொழில்துறையில் பெண்களுக்கு போதுமான வசதிகள் எதுவுமே இல்லை என்றும், அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.. கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடு, ஆன்லைன் துன்புறுத்தல், பாலியல் சித்திரவதை எஎன மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் 17 முக்கிய பிரச்சனைகளை இன்றைய ஹேமா கமிட்டி முன்னிலைப்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு: மலையாள சினிமாவில் பாதுகாப்பு கிடையாது, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் கிடையாது, சினிமா துறையில் முழுமையான ஆண் ஆதிக்கம், அதிகமாக நிலவும் பாலின சார்பு மற்றும் பாலின பாகுபாடு என ஒன்றுவிடாமல் ஹேமா கமிட்டி புட்டு புட்டு வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, நடிகர் நடிகைகளுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களை ஓட்டுநர்களாக நியமிக்க தடை விதிக்க வேண்டும். ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பான இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். ஷூட்டிங் நடக்கும் இடங்களில் மதுபானம், போதைப்பொருட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஹேமா கமிட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

முன்னதாக, ஹேமா கமிட்டி விசாரணையின் போது அவரிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் பிரபல நடிகை ரஞ்சினியும் ஒருவர். 2 நாட்களுக்கு முன்பு, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகை ரஞ்சனி, கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்..

பரபரப்பு: அதில், வாக்குமூலம் அளித்த நடிகைகளுக்கு ஒரு பிரதியை அளித்து, அவர்களின் சம்மதத்தை பெற்று, அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.. இந்நிலையில், நிலையில், நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை கேரள திரையுலகில் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+