மலையாள சினிமா: நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் ஆபத்துதான்! அதிர வைக்கும் ஹேமா கமிஷன் ரிப்போர்ட்
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் ரிப்போர்ட் இன்று வெளியானது. இதில் நடிகைகள் மற்றும் பெண்கள் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பல வித சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் மட்டுமின்றி ஆண் கலைஞர்களும் கூட இதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள ஐகோர்ட் நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைத்தது.

ஆண் கலைஞர்களுக்கும் கூட: இதற்கிடையே இந்த ஹேமா கமிஷன் ரிப்போர்ட்டில் வேறு சில பகீர் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது மலையாள சினிமாவில் பெண்கள் மட்டுமின்றி நடிகர்களும் கூட பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றுமே இல்லாத காரணங்களுக்காகக் கூட சில ஆண் கலைஞர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அதுவும் எந்தவொரு முகாந்திரமும் இல்லாத வகையில் நீண்ட காலம் பணிபுரியத் தடை விதிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்: மலையாள சினிமாவில் செல்வாக்கு மிக்க ஒரு நெட்வொர்க் இருக்கிறது. இந்த நெட்வொர்க் கட்டுப்பாட்டில் தான் மலையாள சினிமாவே இருக்கிறது. இந்த பவுர்புல் நபர்களைத் தெரியாமல் கோபப்படுத்தும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இதுபோன்ற நீண்ட கால தடைகள் விதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே மலையாள சினிமாவில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பல ஆண் கலைஞர்களும் கூட வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். எங்கு தாங்கள் கூறும் தகவலே சினிமாவில் தங்கள் எதிர்காலத்தைப் பாதித்துவிடுமோ என அவர்கள் பயப்படுகிறார்கள்.
தயக்கம்: ஆனால், இதையும் தாண்டி சில ஆண்கள் மலையாள சினிமாவில் உள்ள பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது சந்தோஷத்தைத் தருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச திரைத்துறையினர் இணைந்து WCC என்ற கமிட்டியை அமைத்துள்ளதும் நல்ல முன்னெடுப்பு என்று இந்த ஆண் கலைஞர்கள் பாராட்டி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
எதற்காக இந்த கமிட்டி: மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விசாரிக்கக் கேரள அரசு இந்த கமிட்டியை உருவாக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல பகீர் சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்தே இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
நடிகை சாரதா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே பி வத்சலா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு தரப்பினரிடம் சென்று விசாரித்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தனர். இந்தக் குழு கடந்த 2019 டிசம்பர் 31ம் தேதியே தனது அறிக்கையைக் கேரள அரசிடம் சமர்ப்பித்தது. இருப்பினும், சில காரணங்களால் இந்த கமிட்டி ரிப்போர்ட் வெளியிடப்படவில்லை. இதற்காகக் கேரள அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
பிறகு நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னரே இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்போதும் கூட முழு அறிக்கை வெளியிடப்படவில்லை. முழுமையாக வெளியிட்டால் அது ரிப்போர்ட்டில் இருக்கும் நபர்களின் பிரைவசியை பாதிக்கும் என்பதால் அந்த அறிக்கையின் 233 பக்கங்களை மட்டுமே இப்போது கேரள அரசு வெளியிட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications