மலையாள கரையில் மலைக்க வைக்கும் புகார்! கண்ணீருடன் குமுறும் நடிகைகள்.. கோர்ட்டுக்கு ஓடும் நடிகர்கள்
திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் திரை உலகில் நடிகர்கள் மற்றும் பெண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க கோரி நடிகர்கள் முகேஷ், சித்திக் ஆகியோர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மலையாள திரையுலகில் பாலியல் புகார் தொடர்பாக மலையாள நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான கொடுமை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

இதில் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வல்சலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் இந்த கமிட்டி விசாரணை நடத்தியது.
தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் திரை உலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்கொடுமைகள் புறக்கணிப்புகள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். 2019ஆம் ஆண்டு இந்த குழு தனது அறிக்கையை கேரள முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது. ஆனால் பல ஆண்டுகளாக அது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் உரிமை ஆணையத்தின் மூலம் இந்த அறிக்கை வெளியானது.
அதில் பல நடிகைகள் பெண் கலைஞர்களுக்கு பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றதாகவும், பாலியல் இச்சைக்கு அழைக்கும் நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகள், பெண் தொழில்நுட்ப பணியாளர்கள் மலையாள சினிமாவில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை அடுத்து மலையாள நடிகர்கள் இயக்குனர்கள் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலையாள சினிமா அகடமி தலைவரும் பிரபல இயக்குனருமான ரஞ்சித், தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார் .
அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தார். மேலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்ளிட்ட 4 முக்கிய மலையாள நடிகர்கள் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதை அடுத்து அவருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் கட்சியினர் அவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், முகேஷை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் முகேஷ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை அடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ் திரைப்படக் கொள்கை வகுப்பதற்கான கேரளா அரசின் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே முகேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் எம்எல்ஏவாக இருக்கும் அவர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு இருப்பதால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குரல் வலுத்திருக்கிறது. இதற்கிடையே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என நடிகர் எம்எல்ஏவுமான முகேஷ் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மூன்றாம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில் தனது எம்எல்ஏ பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இந்த நிலையில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க கோரி நடிகர்கள் முகேஷ், சித்திக் ஆகியோர் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே முகேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அது இன்று விசாரணைக்கு வருகிறது. அதே போல நடிகர் சித்திக் தற்போது மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் அவர் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மலையாளத் திரை உலகில் பல இயக்குனர்கள் நடிகர்கள் மீது புகார் குவிந்து வரும் நிலையில் அவர்களும் முன் ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை நாடி இருக்கின்றனர். ஹேமா கமிட்டி விவகாரம் மலையாள திரையுலகம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் எதிரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications