மார்பகங்களை அறுத்து கொடூரம்.. கேரளா நரபலி கொலையாளிகள் சிக்கியது எப்படி? துப்பு கொடுத்த சிசிடிவி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழக பெண் உள்பட இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் முதல் முதலில் போலீஸாருக்கு துப்பு கொடுத்ததே சிசிடிவி காட்சிகள்தான்.

கேரளா மட்டுமல்லாது தென்னிந்தியாவையே உலுக்கிய ஒரு சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் குறுகிய காலத்தில் பணக்காரர்கள் ஆக வேண்டி 3 பணத்தாசை பிடித்த நபர்களால் அநியாயமாக இரு உயிர்கள் கொல்லப்பட்டன.

தருமபுரியை சேர்ந்தவர் பத்மா. இவர் சில ஆண்டுகளாக கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள்

உறவினர்கள்

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அது போல் கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்பவரும் கடந்த ஜூன் மாதம் முதல் காணாமல் போனார். இவர் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இருவரது செல்போன் எண்களின் டவர் கடைசியாக எங்கே இருந்தது என்பதை போலீஸார் ஆய்வு செய்தனர்.

செல்போன் எண்கள்

செல்போன் எண்கள்

அப்போது இருவரது செல்போன் எண்கள் திருவல்லா பகுதியில் அதாவது ஒரே பகுதியில் இருந்தன. இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அந்த இரு பெண்களும் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த பகவத் சிங்,அவரது மனைவி லைலா சிங், முகமது ஷபி ஆகியோர்தான் இந்த பெண்களை கொலை செய்தது தெரியவந்தது.

மசாஜ் டெக்னீஷியன்

மசாஜ் டெக்னீஷியன்

மசாஜ் டெக்னீஷியனாக உள்ள பகவத் சிங் குறுகிய காலத்தில் பணக்காரராக ஆசைப்பட்டார். அப்போது லைலாவுக்கு முகமது ஷபி அறிமுகமானார். அவரிடம் தங்களது ஆசையை இந்த தம்பதி கூறினர். உடனே அவர் நரபலி கொடுத்தால் நீங்கள் நினைத்தது நடக்கும், தொட்டது துலங்கும் என தெரிவித்தாராம். இதையடுத்து தனக்கு ஏற்கெனவே பழக்கமான பத்மா, ரோஸ்லின் ஆகியோரை பகவத் சிங் வீட்டிற்கு முகமது ஷபி அழைத்து சென்றார்.

டார்ச்சர்

டார்ச்சர்

அங்கு அந்த இரு பெண்களையும் டார்ச்சர் செய்துள்ளனர். ரோஸ்லினின் பிறப்புறுப்பில் லைலா சிங் கத்தியை நுழைத்து டார்ச்சர் செய்தாராம். அது போல் பகவத் சிங், ரோஸ்லினின் மார்பகத்தை துண்டித்துள்ளார். பின்னர் ரோஸ்லினை 56 துண்டுகளாகவும் பத்மாவை 5 துண்டுகளாகவும் வெட்டியுள்ளனர்.

சைக்கோ

சைக்கோ

முகமது ஷபி சைக்கோ என தெரியவந்துள்ளது. அவர் இது போல் நிறைய பேரை கொன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் கைதான நிலையில் சிசிடிவி காட்சிதான் இந்த இரட்டை நரபலிக்கு துப்பு கொடுத்தது என போலீஸார் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 26ஆம் தேதி பத்மா காணாமல் போன நாள் முதல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பத்மா பத்தனம்திட்டாவில் உள்ள லைலா சிங்கின் வீட்டை நோக்கி சென்றது தெரியவந்தது.

சிக்கிய சிசிடிவி காட்சி

சிக்கிய சிசிடிவி காட்சி

இதையடுத்து லைலா சிங்கின் வீட்டுக்கு அருகே உள்ளவரின் வீட்டு சிசிடிவியையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பத்மா, லைலா சிங் வீட்டுக்குள் செல்வது தெரியவந்தது. இதை வைத்துதான் கொலையாளியை எளிதாக போலீஸார் அணுகினர். மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்கள்தான் இது போன்ற கொலை சம்பவங்களில் முக்கிய ஆதாரங்களை திரட்டி தருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+