சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. இந்த ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டலகால பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருவாயும் கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற கோயிலாக சபரிமலை ஐயப்பன் கோயில் திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வது வழக்கம். மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர்.

சிறுவர்கள் முதல் முதியோர் வரை கடும் விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்வர். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம். சபரிமலைக்கு செல்வதற்கு 3 பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் பெரும்பாலும் பம்பையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலையேறி ஐயப்பனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது பாரம்பரிய பாதையாகும். எரிமேலியில் இருந்து பெருவழிப் பாதை வழியாகச் செல்வது மிகவும் கடினமாகும். இருப்பினும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருவழிப் பாதை எனும் மலைப்பாதையில் எருமேலி தொடங்கி சபரிமலை வரை நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதும் வழக்கம்.
பம்பை, பெருவழியைத் தவிர எளிமையக செல்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் அருகே சத்திரம், புல்மேடு ஆகியை மிகவும் எளிமையாக இருக்கும். சபரிமலை சீசனையொட்டி இந்த இரண்டு பாதைகளும் திறந்துவிடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவ்வழியாகச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், பம்பையில் ஸ்பாட் புக்கிங் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆதார் அட்டை கொண்டு வரும் அனைவருக்கும் தரிசனத்துக்கான பாஸ் வழங்கப்படும். பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 நாட்களில் 6,12,290 ஆயிரம் பேர் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டால் கூடுதலாக 3,03,501 பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும் முடிவு இல்லை. பம்பையில் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதி வழங்கப்படும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் வர முடியாத பட்சத்தில் அதனை ரத்து செய்ய மெசேஜ் அனுப்பப்படுகிறது. ஆனால், பக்தர்கள் ரத்து செய்வதில்லை. இதனால், 15 ஆயிரம் பேர் வரை வராமல் போகும் நிலை உள்ளது.
இந்த செயலை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கின்றனரா என தெரியவில்லை. கடந்த 9 நாட்களில் 80 ஆயிரம் பேர் வரை சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு 41 கோடியே 64 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட 13 கோடியே 33 லட்சத்து 79,801 ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications