மகள் கண் முன்னே.. கியாஸ் சிலிண்டரை மனைவியின் தலைலேயே தூக்கி போட்ட கணவன்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம், கரிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. மதுசூதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி தட்டி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் மனைவியின் தலையிலேயே கியாஸ் சிலிண்டரைபோட்டுள்ளார் மதுசூதனன்... கொல்லம் நகரை ஆடிப்போக வைத்த சம்பவம் பற்றி பார்ப்போம்
கேரள மாநிலம் கொல்லம், கரிக்கோடு பகுதியில் 54 வயதாகும் மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கவிதாவுக்கு 46 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. மதுசூதனனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது.

நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி தட்டி கேட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த மதுசூதனன், மனைவி கவிதாவை மிதித்து கீழே தள்ளியிருக்கிறார். அப்போது தடுக்க சென்ற மகளையும் அவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
அத்துடன் கீழே விழுந்து கிடந்த கவிதாவின் தலையில் கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்டார். இதில் தலை சிதைந்து கவிதா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை எல்லாம் கண் முன்னே பார்த்த மகள் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கவிதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு ஆடிப்போனார்கள்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொல்லம் போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுசூதனனை கைது செய்தனர். குடும்ப தகராறில் மகளின் கண் எதிரே கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொல்லம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications