பாஜகவுக்கு அஞ்ச மாட்டேன்.. எம்பி என்பது பட்டமே! கேரளாவில் கர்ஜித்த ராகுல் காந்தி -வயநாட்டில் பேரணி
திருவனந்தபுரம்: மோடி மீது அவதூறாக பேசியதாக கூறி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் எம்பி பதவியை இழந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியினருடன் பேரணி சென்றார். அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜகவுக்கு தான் ஒருபோதும் அஞ்சப்போவது கிடையாது என்றார்.
ராகுல் காந்தி எம்பியாக பதவி வகித்த கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று பேரணி சென்று தொகுதி மக்களை சந்தித்தார். இந்த பேரணியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பேரணி: எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக வயநாடு தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். அதை தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, "நான் வயநாடு பகுதியை சேர்ந்தவன் கிடையாது. ஆனாலும் இப்பகுதி மக்கள் என்னை அவர்கள் குடும்பத்தின் ஒருவராக நினைக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் என்ன என்று பலமுறை நான் சிந்தித்து இருக்கிறேன்.மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். எனது எம்பி பதவி பறிக்கப்படலாம். அதே நேரம் பாஜகவால் நான் மக்கள் பிரதிநிதியாக தொடர்வதை தடுக்க முடியாது.
பாஜகவுக்கு அஞ்ச மாட்டேன்: வயநாடு தொகுதி மக்களின் தேவை என்ன என்பதற்காக போராடுபவரே உண்மையான மக்கள் பிரதிநிதி. எம்பி என்பது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் சாதாரணமான ஒரு தகுதிதான். வயநாட்டுக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதற்காக நான் குரல் கொடுத்து இருக்கிறேன். சுதந்திரமான நாட்டில் வாழ வேண்டும் என்பதே வயநாடு மற்றும் இந்திய மக்களுடைய நோக்கம். வெறும் 4, 5 பேருக்கு மட்டும் சொந்தமாக இருக்கும் நாட்டில் யாருமே வாழ விரும்ப மாட்டார்கள்.
வீட்டுக்கு போலீசாரை அனுப்புவதன் மூலம் என்னை பயமுறுத்த முடியாது. என்னுடைய வீட்டை அபகரிப்பதன் மூலம் என்னுடைய நிம்மதியை கெடுக்க முடியாது. பாஜக அரசு எனது வீட்டை பறித்தாலும் நான் அதை பற்றி கவலைப்பட மாட்டேன். பாஜக மக்களவை பிளவுபடுத்துவதுடன் மக்கள் மத்தியில் மோதலை உண்டாக்குகிறது.

அதானி விவகாரம்: பல ஆண்டுகளாக பாஜகவை எதிர்த்து போராடி வருகிறோம். பாரதிய ஜனதாவிற்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்நான் ஒவ்வொரு சிறிய சமூகத்தையும் மதத்தையும் மதிக்கிறேன். தற்போது இரு வகையான சமூக கண்ணோட்டங்களுக்கு இடையில் மோதல் நடக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் வயநாடு மக்களுக்காக போராடுவேன் என உறுதியளிக்கிறேன். நான் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட ஒரு தொழிலதிபர் பற்றி கேள்வி எழுப்பினேன்.
உங்களுக்கு அதானியிடம் என்ன தொடர்பு என பிரதமர் மோடியினர் வினவினேன். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 2 வது இடத்துக்கு எப்படி வந்தார் என்று கேட்டேன். அதானிக்காக இந்திய விமான நிலையங்கள் தொடர்புடைய விதிகள், இந்திய வெளியுறவுக் கொள்கைகள் வளைக்கப்பட்டு உள்ளன." என்று தெரிவித்தார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications