Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் இப்படி பண்ணீங்க? ஒரே ஒரு போட்டோஷூட்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்.. கேரள நடிகைக்கு நேர்ந்த அவலம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் எடுத்த போட்டோஷூட் காரணமாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த மலையாள நடிகை தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Recommended Video

    Kerala-வில் Photoshoot எடுத்த நடிகை அதிரடி கைது ஏன்? | Palliyodam | Oneindia Tamil

    கேரளாவில் பொதுவாகவே திருமணம் தொடங்கி எல்லா வீட்டு விழாக்களிலும் போட்டோஷூட் எடுப்பது வழக்கம். வினோதமான தீம் வைத்து போட்டோஷூட் எடுத்து வைரலாக்குவது கேரளாவில் வழக்கமாகி வருகிறது. சில சர்ச்சையான போட்டோஷூட்களும் அவ்வப்போது எடுக்கப்பட்டு தேசிய அளவில் வைரலாவதும் வழக்கம்.

    அப்படி ஒரு போட்டோஷூட்தான் தற்போது கேரளாவில் எடுக்கப்பட்டு சர்ச்சையாகி உள்ளது. கேரளாவை சேர்ந்த நடிகையும் சமூக வலைதள பிரபலமுமான நிமிஷா பிஜோ என்பவர் எடுத்த போட்டோஷூட் காரணமாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    கேரளாவை சேர்ந்த நடிகை நிமிஷா பிஜோ. இவர் சில சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்து கொண்டு வருகிறார். மிகவும் பிரபலமான இவர் உன்னி என்ற நபருடன் இணைந்து பல்லியோடம் போட்டோஷூட் என்ற போட்டோஷூட்டை நடத்தினார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. பல்லியோடம் என்பது கேரளாவில் காணப்படும் பாம்பு போல தோற்றம் கொண்ட நீண்ட படகுகள் ஆகும்.

    கைது

    கைது

    இந்த படகில் நின்று நிமிஷா எடுத்த போட்டோஷூட் காரணமாக இப்போது கைது செய்யப்பட்டுள்ளது. ஜீன்ஸ் அணிந்து, ஷூ போட்டு இவர் போட்டோ வெளியிட்ட காரணத்தால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே ஒரு போட்டோஷூட் நடத்தியதற்கு ஏன் கைது என்று கேள்வி எழலாம்.. பல்லியோடம் என்பது கேரளாவில் மிகவும் புனிதமாக பார்க்கப்படும் கப்பல் ஆகும். அதிலும் இவர் நின்று புகைப்படம் எடுத்த பல்லியோடம் அங்கு அரன்முலா கோவிலுக்கு சொந்தமான கப்பல் ஆகும். பத்தனம்திட்டாவில் பம்பை ஆற்றில் நடக்கும் சாமி ஊர்வலத்திற்கு இந்த கப்பலைத்தான் பயன்படுத்துவார்கள். பாம்பு போல தோற்றம் அளிக்கும் இந்த கப்பல்கள் கடவுள் கிருஷ்ணர் மூலம் வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் என்று அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மரம்

    மரம்

    பலா மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட கட்டைகளை வைத்து இந்த கப்பலை உருவாக்குவார்கள். இதை கிருஷ்ணர் சொன்ன வேத மந்திரங்களை வைத்து உருவாக்கியதாக அங்கு கோவில் ஐதீகங்கங்கள் சொல்கின்றன. இது கேரளாவில் மிகவும் புனிதமாக, பாரம்பரியமாக மதிக்கப்படும் கப்பல்கள் ஆகும் . இந்த கோவிலுக்கு சொந்தமாக 52 கப்பல்கள் உள்ளன. திருவிழாவின் போது இங்கு இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும். ஒரு கப்பலின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இந்த கப்பல்கள் பொதுவாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இங்கே வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். புலியோடா புரா என்ற பகுதியில் இந்த கப்பல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் இங்கு சென்று ஜீன்ஸ் மற்றும் ஷூவோடு புகைப்படம் எடுத்த காரணத்தால் நிமிஷா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக இணையத்தில் கடுமையான குரல்கள் வைக்கப்பட்டு வந்தன. நீங்க இப்படி செய்திருக்க கூடாது என்று.. பலரும் இவரை எதிர்த்து போஸ்ட்டுகளை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வந்தனர். அதோடு இவருக்கு போனில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ஐதீகம்

    ஐதீகம்

    கோவில் ஐதீகத்தை களங்கப்படுத்திவிட்டார் என்று இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. புதுகுளங்கரா பள்ளியோடா சேவா சமிதி என்ற அமைப்பு இவருக்கு எதிராக புகார் அளித்துள்ளது. இந்த படகில் வேஷ்டி கட்டி துண்டு போர்த்தியபடியே செல்ல வேண்டும். சிறப்பு வழிபாடு நடத்திய பின்பே இதில் ஏற வேண்டும். அதை மீறி நிமிஷா ஜீன்ஸ், ஷூ அணிந்து படகில் புகைப்படம் எடுத்து அதை களங்கப்படுத்திவிட்டார் என்று இவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

    கைது பெயில்

    கைது பெயில்

    கலவரத்தை தூண்டுதல் என்ற 153 பிரிவின் கீழ் நிமிஷா கைது செய்யப்பட்டார். அதன்பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நிமிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை டெலிட் செய்துள்ளார். தனக்கு இந்த கப்பலின் வரலாறு தெரியாது. அங்கு நான் போட்டோஷூட் நடத்திய போது அருகில் பலர் இருந்தனர். யாருமே என்னை தடுக்கவில்லை. தெரியாமல் புகைப்படம் எடுத்துவிட்டேன், என்னை மன்னியுங்கள் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+