கேரளா காங்.கின் முக்கிய தலைவர்.. தேர்தலுக்கு முன் பி.சி சாக்கோ கட்சியிலிருந்து விலகல்.. பரபரப்பு!
திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான பிசி சாக்கோ காங்கிரசில் இருந்து விலகி இருக்கிறார்.
தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கேரளாவில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது திடீரென கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் லோக்சபா எம்பியுமான பிசி சாக்கோ காங்கிரசில் இருந்து விலகி இருக்கிறார்.கேரள காங்கிரசில் மட்டுமின்றி தேசிய அளவில் காங்கிரசில் இவர் முக்கியமான தலைவராக பார்க்கப்படுகிறார்.
ஆனால் கட்சியில் சரியான முன்னுரிமை இல்லை என்று கூறி பிசி சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். நேற்று இடைக்கால தேசிய தலைவர் சோனியா காந்திக்கு இவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். பிசி சாக்கோ இது தொடர்பாக அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் வலிமை இழந்து கொண்டே வருகிறது.
இங்கு நல்லவர்களுக்கு இடம் இல்லை. கட்சியில் நிறைய கோஷ்டி இருக்கிறது. காங்கிரஸ் இப்போது ஐ குரூப், ஏ குரூப் என்று இரண்டாக பிரிந்து உள்ளது. ஐ குரூப் உம்மன் சாண்டி மூலம் இயக்கப்படுகிறது. ஏ குரூப் ரமேஷ் சென்னிதலா மூலம் இயக்கப்படுகிறது.
இவர்கள்தான் கோஷ்டி மோதலுக்கு காரணம். இந்த கோஷ்டியில்தான் ஏகே ஆண்டனி, கே கருணாகரன் ஆகியோரும் இருக்கிறார்கள். கேரளா காங்கிரசில் நல்ல தலைமை இல்லை. வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடக்கிறது. என்னுடைய ராஜினாமாவானது தேசிய தலைமைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்று பிசி சாக்கோ தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications