ஷூ காலால் நெஞ்சிலேயே ஒரே மிதி.. துடித்து போன பயணி.. முதல்வர் வரை சென்ற இன்ஸ்பெக்டரின் அட்டகாசம்
ரயில் பயணியை எட்டிஉதைத்த இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்: பூட்ஸ் காலால் ரெயில் பயணியை எட்டிஉதைத்து சரமாரியாக தாக்கி உள்ளார் போலீஸ்காரர் ஒருவர்.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.
Recommended Video

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது... இந்த ரெயில் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி புறப்படும்.
அந்த வகையில் நேற்று காலையும் 5 மணிக்கு ரெயில் கிளம்பியது.. வடகரா ஸ்டேஷனை ரெயில் தாண்டி சென்று கொண்டு இருந்தது...

இன்ஸ்பெக்டர்
அப்போது அந்த ரெயிலில் ரிசர்வேஷன் பெட்டியில் கண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத் என்பவரும் பயணித்து வந்தார்.. சீட்டில் உட்கார்ந்திருந்தவர் திடீரென எழுந்து பயணிகளிடம் டிக்கெட் செக்கிங் செய்துள்ளதாக தெரிகிறது... அந்த வகையில், ஒருவர் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளார்.. அவருக்கு 40 வயதிருக்கும் என்று கூறப்படுகிறது

டிக்கெட்
டிக்கெட் எடுக்காததை அறிந்ததும், இன்பெக்டருக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. டிக்கெட் எடுக்காததற்கு காரணத்தையும் அறிந்து கொள்ள முனையாமல், இன்ஸ்பெக்டர் அந்த நபரை வேகமாக பிடித்து கீழே தள்ளிவிட்டார்.. தன்னுடைய ஷூ காலை, அந்த பயணியின் நெஞ்சில் வைத்து அழுத்தமாக மிதித்தார்... இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த பயணி அலறினார்.. இதை பார்த்து அந்த பெட்டியில் பயணித்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, ஓடி சென்று இன்ஸ்பெக்டரை தடுத்தனர்...

இன்ஸ்பெக்டர்
ஆனாலும் அவர் யாரையும் கண்டுகொள்ளவில்லை.. தன்னுடைய ஷூ காலை அந்த நபரின் மீது வைத்து நீண்ட நேரத்துக்கு மிதித்துக்கொண்டே இருந்தார்.. காலை கொஞ்சமும் அகற்றவில்லை.. இந்த சம்பவம் முழுவதையும் அப்படியே அங்கிருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.. இதை பார்த்து பொதுமக்கள் அதற்கு மேல் அதிர்ந்து போய் உள்ளனர்.. பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

நடவடிக்கை
ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரெயிலில் டிக்கெட் செக்கிங் எப்படி செய்யலாம்? யார் தந்த அதிகாரம்? இன்ஸ்பெக்டர் தன்னுடைய அதிகாரத்தை மீறி அத்துமீறலில், மிருகத்தனமாக ஈடுபட்டுள்ளார் என்று கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.. அவர் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்...

இன்ஸ்பெக்டர்
இந்த வீடியோ படுவைரலானதையடுத்து, கண்ணூர் போலீசாரின் பார்வைக்கும் சென்றுள்ளது.. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் இளங்கோ உத்தரவிட்டு உள்ளார்... நடந்து முடிந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், தவறு இருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்து உள்ளார்.. இதனிடையே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை சஸ்பென்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர்
அதேபோல, இந்த வீடியா முதல்வர் அலுவலகம் வரை சென்றுவிட்டது.. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், சமீபகாலமாக போலீசார் மீது புகார்கள் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது... அதனால், உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்... இன்ஸ்பெக்டர் பயணியை பூட்ஸ் காலால் நெஞ்சை கொடூரமாக மிதிக்கும் வீடியோ இணையத்தில் சுற்றி கொண்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications