கேரளாவில் இன்று ஜன.14-ல் பொங்கல் விடுமுறை - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழர்கள் வாழும் 6 மாவட்டங்களில் இன்று ஜன.14-ல் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் கேரளா மக்களின் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவிலும் ஜனவரி 14-ந் தேதி தமிழர்கள் வாழும் 6 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு வந்தது.

ஜன.15-ல் விடுமுறை என அறிவிப்பு
ஆனால் நடப்பாண்டில் ஜனவரி 15-ந் தேதி அரசு விடுமுறை என கேரளா அரசு அறிவித்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் இதனை மாற்றி அறிவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தை முதல் நாள் பொங்கல்
கேரளா தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் பேச்சி முத்து இது தொடர்பாக கூறுகையில், தை மாதம் முதல் தேதிதான் பொங்கல். ஆனால் தை 2-ந் தேதி பொங்கல் விடுமுறை என கேரளா அரசு அறிவித்திருக்கிறது. இதனால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்கள் விவரத்தை கேரளா அரசுக்கும் அனுப்பி உள்ளோம் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமும் அனுப்பி இருந்தார். அக்கடித விவரம்: தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசு மாற்றி அறிவிப்பு
ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் இன்றுஅறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். கேரளா அரசு இதனை உடனடியாக ஏற்று தமிழர்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களில் இன்று ஜனவரி 14-ந் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications