21 கிலோ வெயிட்டில் மனைவி.. பட்டினி போட்டே மருமகளை காலி செய்த குடும்பம்! கேரளாவில் இப்படியொரு பெண்ணா?
திருவனந்தபுரம்: மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு, கேரளாவில் வரதட்சணை பிரச்சனைகள் தலைதூக்கி வருவதும், அதையொட்டி குடும்ப வன்முறைகள் பெருகுவதும், இந்தியா முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு, கேரள மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. என்ன நடந்தது? கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பூயப்பள்ளி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் லாலி - கீதா தம்பதியினர். இதில் லாலிக்கு 66 வயது, கீதாவுக்கு 62 வயதாகிறது..

வரதட்சணை கொடுமை
இந்த தம்பதிக்கு 36 வயதில் சந்துலால் என்ற மகன் இருக்கிறார்.. இவருக்கு துஷாரா என்ற பெண்ணுடன் கடந்த 2013-ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.. கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் துஷாரா .. இப்போது 28 வயதாகிறது.. துஷாராவின் திருமணத்துக்கு 25 பவுன் நகைகளும், ரூ.5 லட்சம் பணமும் வரதட்சணையாக அவரது வீட்டில் தரப்பட்டது.
சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், வரதட்சணை சூறாவளி வீசத்துவங்கியது.. கூடுதல் வரதட்சணை வேண்டும் என்று கணவர் சந்துலாலும், அவரது பெற்றோரும் துஷாராவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு நடுவில், கடந்த 2018ல், துஷாரா இறந்துவிட்டார்.. இவர் எப்படி இறந்தார் என்று உடனடியாக யாருக்குமே தெரியவில்லை.
பட்டினி கொலை பட்டினி
துஷாராவின் மரணம் அவரது பெற்றோரை நிலைகுலைய வைத்தது.. எனவே, தங்களது மகளின் மரணத்திற்கு கணவன் குடும்பத்தினர் செய்த வரதட்சணையே காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி துஷாராவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து துஷாராவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான், துஷாரா பட்டினி போட்டே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது, அந்த பெண் இறக்கும்போது அவரது உடல் எடை வெறும் 20 கிலோ மட்டுமே இருந்ததாம்.. இதைக் கண்டு டாக்டர்களே அதிர்ச்சி அடைந்தனர்.
தண்டனை விவரங்கள் எப்போது
இதையடுத்து, சந்துலால், அவரது தந்தை லாலி, தாய் கீதா லாலி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது... இதனிடையே, லாலி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். தொடர்ந்து இந்த கொலை வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ், நேற்றைய தினம் தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்ட சந்துலால் மற்றும் அவரது அம்மா கீதா லாலி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை பிறகு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
இந்த தீர்ப்பானது, கேரள மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. பெண்கள் அதிக அளவு படித்த மாநிலம் கேரளா.. கல்விக்கென முக்கியத்துவம் தரப்படும் முதன்மை மாநிலமும்கூட.. கடவுளின் தேசம் என்று புகழப்படும் இந்த கேரளாவில்தான், பெண்களுக்கு எத்தனை எத்தனை வரதட்சணை கொடுமைகள்?? எத்தனை எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications