ஸ்வப்னாவுக்கு ஜாமீன்.. விரைவில் வெளிவருகிறார்.. கேரள தங்க கடத்தல் வழக்கில் ஹைகோர்ட் உத்தரவு
தங்க கடத்தல் ஸ்வப்னாவுக்கு கேரளா கோர்ட் ஜாமீன் வழங்கியது
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷூக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்களில் 13.82 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது..

அது கிட்டத்தட்ட 30 கிலோ தங்கமாகும்.. தூதரக பெயரை பயன்படுத்தி இந்த தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் கேரளாவை புரட்டி போட்டது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.. இது முதல்வர் பினராயி விஜயனுக்கு பெருத்த சிக்கலை உண்டுபண்ணியது.. காரணம், முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்தவர்தான் சிவசங்கரன்.. இவரது அலுவலகத்தில் பணியாற்றியவர்தான் ஸ்வப்னா.. இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை உள்பட 5 மத்திய விசாரணை அமைப்புகள் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன..
இதில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கைதானார்... இவருடன் சேர்த்து மேலும் பலர் கைதாகினர்.. இந்த வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, தங்கக்கடத்தல் வழக்கில் ஜெயிலில் உள்ள ஸ்வப்னா மீது சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் பெறப்பட்டுவிட்டது.. ஆனாலும், தேசியபுலனாய்வு அமைப்பு சார்பில் பதியப்பட்டுள்ள உபா வழக்கில் விசாரணை இன்னமும் நடந்து வருவதால், ஸ்வப்னா ஜெயிலிலேயே இருக்கிறார்..
எனவே, தனக்கு ஜாமீன் வேண்டும் என்ற ஸ்வப்னா கேரள ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்... அந்த மனு இன்று விசாணைக்கு வந்தது... அப்போது ஸ்வப்னாவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. அத்துடன் 25 லட்சம் ரூபாய் ஜாமீன் பத்திரம், அதற்கான பணத்தை வழங்க திறன்கொண்ட 2 பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஸ்வப்னா விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications