சகோதரருடன் உடலுறவு.. 12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. ஏன் தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் மைனர் சகோதரருடன் வைத்த உடலுறவால் 12 வயது சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கேரளா உயர்நீதிமன்றத்தை நாடி கருவை கலைக்க அனுமதி கோரிய நிலையில் அதனை கலைக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது நடத்தையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில் டாக்டர்கள் கூறிய வார்த்தைகள் சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி நடத்திய விசாரணையில் தான் அடுத்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது அந்த சிறுமிக்கும், அவரது 18 வயது சகோதரருக்கும் தகாத உறவு இருந்ததும், இதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்தது. இதை கேட்டு உறைந்துபோன பெற்றோர் தங்களின் மகளின் கர்ப்பத்தை மருத்துவமனை மூலம் கலைக்க முடிவு செய்தனர். இதையடுத்து மகளான 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பெற்றோர் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரரான பெற்றோர் தரப்பில், ‛‛தங்களின் மகள் கர்ப்பமாக இருப்பது பற்றி எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. இந்த வயதில் வயிற்றில் குழந்தையை சுமப்பது என்பது அவளுக்கு உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் கருவை கலைக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமிக்கு மருத்துவ குழு பரிசோதனைகள் செய்தது. அப்போது சிறுமியின் வயிற்றில் உள்ள கருவானது 34 வாரம் வளர்ந்து இருப்பது தெரியவந்தது. மேலும் கரு முழுமையாக வளர்ச்சியடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தான் நீதிமன்றம் சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக நீதிமன்றம், ‛‛கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது. கருப்பைக்கு வெளியே கரு வளர தயாராகி உள்ளது. இந்த சமயத்தில் கருவை கலைப்பது இயலாதது ஒன்று. இதனால் கருவை கலைப்பது சரியாக இருக்காது. குழந்தைய பிறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் சிறுமியை அவரது சகோதரர் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். 36 வாரங்களுக்கு பிறகு அருகே உள்ள அரசு மருத்துவமனையை அணுகி டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் குழந்தை பிறப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இதேபோல் 12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மறுத்தது. அந்த வழக்கில் தொடர்புடைய சிறுமி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கர்ப்பமான நிலையில் கரு என்பது நன்கு வளர்ச்சி அடைந்து இருந்ததோடு, கருக்கலைவு மேற்கொள்வது என்பது தாய் மரணத்தை அடையும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி மறுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications