நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
திருவனந்தபுரம்: ராகுல் காந்தியை இரண்டாம் தர குடிமன் என்று விமர்சித்த கேரள இடதுசாரி ஆதரவு எம்எல்ஏ அன்வர், ராகுலுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஆறு கட்ட தேர்தல் நடக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது.

சர்ச்சை: இதனால் அங்கே பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசை ஆதரிக்கும் சுயேச்சை எம்எல்ஏ பிவி அன்வர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இரண்டாம் தர குடிமகன் என்றும் அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலக்காட்டில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நீலம்பூர் எம்எல்ஏ பிவி அன்வர், "ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு பகுதியைச் சேர்ந்தவன் தான் நான்.. அவரை காந்தி என்ற பெரயை சொல்லி அழைக்க முடியாது. அவர் அந்தளவுக்கு கீழ்த்தரமான குடிமகனாக மாறிவிட்டார். எனவே, காந்தியின் பெயரை பயன்படுத்த ராகுலுக்கு தகுதியே இல்லை.. நான் மட்டுமில்லை.. கடந்த சில நாட்களாக நாட்டு மக்கள் இதைத்தான் கூறி வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி: கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயனை சாடி ராகுல் காந்தி பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி தரவே அன்வர் இதுபோல பேசியுள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பினராயி விஜயன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது. மத்திய விசாரணை முகமைகளும் அவர் மீது பல வழக்குகளை விசாரித்து வருகின்றன.
இருப்பினும், மற்ற தலைவர்களை மத்திய விசாரணை முகமை கைது செய்யும் போதிலும் பிரனாயி விஜயனுக்கு மட்டும் விதிலக்கு அளித்துள்ளனரே.. ஏன்?" என்று கேட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு தான் பதிலடி கொடுப்பதாக நினைத்து அன்வர் இதுபோல எல்லாம் பேசியிருக்கிறார்.
டிஎன்டி பரிசோதனை: அன்வர் மேலும் பேசுகையில், "நேரு குடும்பத்தில் இருந்து இப்படியொரு நபரா? நேரு குடும்பத்தில் பிறந்தவர்கள் யாராவது இப்படி பேசுவார்களா.. எனவே எனக்கு சந்தேகம் உள்ளது. ராகுல் காந்திக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஜவஹர்லால் நேருவின் பேரன் என்று சொல்லிக் கொள்ள ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் இல்லை. ராகுல் காந்தி பிரதமர் மோடியின் ஏஜெண்டாக இருப்பாரோ என்று சந்தேகம் கூட வருகிறது" என்று பேசியிருந்தார்.
காங்கிரஸ் புகார்: அன்வரின் இந்தப் பேச்சு பெரியளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அன்வருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் எம்.எம்.ஹாசன் தெரிவித்தார். மேலும், அன்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸின் ஹாசன் பேசுகையில்,"பி.வி. அன்வர் கோட்சேவின் புதிய அவதாரம். காந்தியை கொன்ற கோட்சேயின் தோட்டாக்களை விட அன்வாரின் வார்த்தைகள் கொடியவை. மக்கள் பிரதிநிதி பேச கூடாத வார்த்தைகளை எல்லாம் அன்வர் பேசியுள்ளார். கேரள முதல்வர் சொல்லி தான் அன்வர் இப்படி பேசுவது போல இருக்கிறது" என்ரும் அவர் சாாடியுள்ளார்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications