"இன்னும் நம்பிக்கை இருக்கு.." ஏமனில் கேரள நர்ஸுக்கு மரண தண்டனை! மகளை காப்பாற்ற போராடும் தாய் கண்ணீர்
திருவனந்தபுரம்: ஏமன் நாட்டில் கொலை வழக்கில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அவரது தாயார் பிரேமா குமாரி அங்குத் தனியாளாகப் போராடிக் கொண்டு இருக்கிறார். இந்தச் சூழலில் நமது ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த பிரேமா குமாரி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக இந்தியர்கள் பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வேலை செய்வார்கள். அப்படி ஏமன் நாட்டிற்குச் செவிலியராக வேலைக்குச் சென்றவர் தான் நிமிஷா பிரியா.

கேரள செவிலியர் நிமிஷா பிரியா:
ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கே கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நிமிஷா பிரியாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதன் மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்த நிலையில், அந்நாட்டின் அதிபரிடம் இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் நிமிஷாவின் மரண தண்டனையை அந்நாட்டின் அதிபர் உறுதி செய்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நிறுத்த நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமாகுமாரி தனி ஆளாகப் போராடி வருகிறார். இந்தாண்டு தொடக்கத்தில் ஏமன் நாட்டிற்குச் சென்ற அவர் மகளை விடுவிப்பது தொடர்பாகக் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்நாட்டு சட்டப்படி உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் குறிப்பிட்டும் ரத்த பணத்தைக் கொடுத்தால் மரண தண்டனையை நிறுத்தலாம் என்ற வாய்ப்பு இருந்தது. இதற்காக அவர் அங்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நிமிஷா பிரியாவின் தாயார் பரபர:
இந்தச் சூழலில் ஒன் இந்தியா செய்தியாளர்கள் செவிலியர் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரியை தொடர்பு கொண்ட நிலையில், அவர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு அதிபர் கையெழுத்திட்டாலும் கூட, இன்னுமே கூட கடைசி வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மரண தண்டனைக்கு இப்போது அதிபர் கையெழுத்திட்டு விட்டார். இதனால் நமக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இப்போது நாம் நேரத்தை வீணடிக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து நிமிஷாவை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இத்தனை காலம் இந்த விவகாரத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
ஒரே கோரிக்கை:
எனது மகளை மீட்டு வரும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனது மகளைப் பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாகச் செய்ய வேண்டும் என்பதே இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே கோரிக்கை" என்றார். குடும்பத்தினருக்கு மரண தண்டனையை ரத்து செய்வது பேச்சுவார்த்தை நடத்த இவர் அங்குப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன வாய்ப்பு:
இந்த விவகாரத்தில் அனைத்து கதவுகளும் சாத்தப்படவில்லை என்றும் இன்னும் அவரை மீட்டு வர வாய்ப்பு இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் சாமுவேல் ஜெரோம் தெரிவித்துள்ளார். நிமிஷா விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு உதவி வரும் சமூக ஆர்வலர் சாமுவேல் மேலும் கூறுகையில், "இன்னும் அனைத்து கதவுகளும் மூடப்படவில்லை. கடைசி மற்றும் இறுதி முடிவு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் உள்ளது. அவரது குடும்பத்தினரைச் சம்மதிக்க வைத்தால் நிமிஷாவை காப்பாற்றலாம்" என்றார்.
முன்னதாக செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்த மத்திய அரசு முயல வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே பிரியாவின் குடும்பத்தினர் தற்போதுள்ள வழிகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த விஷயத்தில் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications