இன்புட் கொடுத்த எதிர் சீட் பயணி.. கோழிக்கோடு ரயிலுக்கு தீ வைத்த நபரின் வரைபடம் வெளியீடு
திருவனந்தபுரம்: கோழிக்கோடு ரயிலுக்கு தீ வைத்த நபரின் வரைபடத்தை கேரளா போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதை வைத்து தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
Recommended Video
ஆலப்புழா- கண்ணூர் விரைவு ரயில் கோழிக்கோடு மாவட்டம், எலத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 9.37 மணிக்கு டி1 கோச்சில் பயணம் செய்த பெண் உள்பட பயணிகள் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதனால் ரயில் பெட்டி எரிய தொடங்கியது. இதையடுத்து சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனே அந்த நபர் ரயிலை விட்டு இறங்கியோடினார்.

9 பேர் காயம்
இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். மேலும் அந்த ரயில் பயணித்த ரயில் தண்டவாளத்தில் ஒரு ஆண், பெண், ஒரு வயது குழந்தை ஆகியோர் உடல்கள் சிதறி கிடந்தன. இவர்கள் ரயிலுக்கு தீ வைத்த நேரத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்த ரயில் பெட்டியிலிருந்து குதித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

உடல் சிதைந்த மூவர்
அந்த மூவரின் உடல்கள் இருந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் எலத்தூர் ரயில் நிலையம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் கருப்பு சிகப்பில் சட்டையும் கருப்பு நிறத்தில் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் அவருடைய முதுகில் ஒரு பை மாட்டியிருந்தார்.

இரு சக்கர வாகனம்
ஒரு இரு சக்கர வாகனம் வந்தது. அதில் அவர் தப்பி சென்றார். அதற்கு முன்னதாக யாருடனோ செல்போனில் பேசியபடியே நின்றிருந்தார். மேலும் அதே கோச்சில் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ரஷீக் என்பவரின் உதவியுடன் போலீஸார் அந்த மர்மநபரின் வரைபடத்தை தயார் செய்து வந்தனர். இந்த நிலையில் அவருடைய படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கைக்குட்டை
அந்த நபர் தலையில் கைக்குட்டை போல் அணிந்திருந்தார். லேசாக தாடியிருந்தது. அது போல் மார்பு பகுதியில் இருக்கும் முடிகள் கழுத்து வரை இருந்தது. அவர் ஒல்லியாக இருந்தார் என பயணிகள் கூறுகிறார்கள். அந்த நபர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

மர்ம டைரி
மேலும் சந்தேகிக்கப்படும் நபருடைய டைரி என சொல்லப்படும் ஒரு பொருளை அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகே போலீஸார் கைப்பற்றினர். அதில் ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தன. அதில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய ஊர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஒரு வேலை அந்த நபர் நாசவேலை செய்து ரயிலை விபத்துக்குள்ளாக்கி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவற்றையெல்லாம் செய்தாரா என்பது தெரியவில்லை. அந்த நபர் கைது செய்யப்பட்டால்தான் அவர் குறித்து தெரியவரும்.
-
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications