ஆடை உரிமை உண்டு.. கேரளாவில் ஆசிரியைகள் சேலை அணிவது கட்டாயம் கிடையாது- அமைச்சர் விளக்கம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆசிரியைகள் கட்டாயம் புடவை அணிய வேண்டும் என்பதில்லை. அது போன்ற நடைமுறையை அமல்படுத்துவது ஆக்கப்பூர்வமானதாக இருக்காது. உடை அணிவது அவரவர் விருப்பம் என்று கேரள உயர்கல்வி துறை அமைச்சர் ஆர் பிந்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,கல்லூர் விரிவுரையாளர்கள் சேலை அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என கேரள அரசுக்கு புகார்கள் வந்தன.
நாகரிகமான ஆடைகளை அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு. இதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பேராசிரியர்கள்
அதில் பெண் ஆசிரியைகள் , பேராசிரியர்கள் ஆடை அணவதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அவர்கள் நிச்சயம் புடவையைதான் அணிய வேண்டும் என்பதில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறுகையில் உடை விவகாரத்தில் கேரள அரசு பலமுறை தனுத நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. தங்கள் உடலின் வசதிக்கு ஏற்பவும் கல்வி நிறுவனத்திற்கு ஏற்பவும் உடை அணிய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆசிரியைகள் என்றால் கட்டாயம் சேலைதான் அணிய வேண்டும் என்றில்லை. அது கேரளாவில் கட்டாயமில்லை.

ஆடை விஷயம்
காலத்துக்கு உதவாக மாற்றத்தையும் சிந்தனைகளையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் ஆடை அணிவது அவரின் தனிப்பட்ட முடிவு. ஒருவரது ஆடை விஷயத்தை விமர்சிக்கவோ தலையிட்டுக் கருத்து கூறவோ யாருக்கும் உரிமையில்லை. கேரளா போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலத்தில் ஆசிரியைகள் சேலை அணிந்து வர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தனது உத்தரவில் பிந்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு அரசாணை
ஆடை விவகாரம் தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அரசு தெளிவாக அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கூடுதலாக இந்த அரசாணையையும் அமைச்சர் பிந்து வெளியிட்டுள்ளார். திருச்சூரில் கேரள வர்மக் கலை கல்லூரியில் பேராசிரியையாக இருந்த அமைச்சர் பிந்து சுடிதாரை அணிந்து கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

சுடிதார்
திருவண்ணாமலை ஜவ்வாது மலை அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மகாலட்சுமி, மாணவிகளுடன் நண்பியை போல் பழகவும் அவர்களுடன் விளையாடவும் புடவை சவுகரியப்படாது என்பதால் மாணவிகளும் அணியும் சீருடை நிறத்தில் சுடிதார் அணிந்து கொண்டு பள்ளிக்கு வரும் சம்பவம் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications