குடிச்சிடுவேன்! விபரீதத்தில் முடிந்த "Prank"'.. கணவன் பண்ண சின்ன தப்பு! துடிதுடிக்க பலியான கர்ப்பிணி
திருவனந்தபுரம்: கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் விளையாட்டாய் செய்த சம்பவம் ஒன்றால் துடி துடிக்க பலியானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே இருக்கும் ஆசாரி பரம்பு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீலஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் வெளிநாடு சென்ற அவினாஷ், கடந்த 4 மாதங்களுக்கு முன் ஊருக்கு திரும்பினார். அவினாஷ் துபாயில் பணியாற்றி வந்தார்.

அவினாஷ்
இந்த நிலையில் அவினாஷ் வீட்டிற்கு வந்த நிலையில் ஸ்ரீலஷ்மி கருவுற்றார். ஸ்ரீலஷ்மி கருவுற்ற காரணத்தால் தனது மனைவியோடு இருக்க அவினாஷ் விரும்பி இருக்கிறார். இதனால் துபாய்க்கு திரும்பி செல்லும் பிளானை தள்ளி வைத்து இருக்கிறார். ஆனால் ஸ்ரீலஷ்மிக்கு அவினாஷ் ஊரில் இருப்பது பிடிக்கவில்லை. நமக்கு கடன் இருக்கு. குழந்தை பிறந்தால் நிறைய செலவு இருக்கும் என்று ஸ்ரீலஷ்மி கூறியுள்ளார்.

வெளிநாடு செல்லுங்கள்
நீங்கள் வெளிநாடு திரும்பி செல்லுங்கள், குழந்தை பிறக்கும் முன் லீவ் கேட்டுவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் துபாய்க்கு திரும்பி செல்ல விரும்பாத அவினாஷ், எனக்கு 3 மாசம் லீவ். கொரோனா காரணமா போக முடியவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதையும் ஸ்ரீலஷ்மி நம்பி இருக்கிறார். ஆனால் அவினாஷ் துபாய் போக விருப்பம் இல்லாமல் பொய் சொன்னது பின்புதான் ஸ்ரீலஷ்மிக்கு தெரியவந்தது.

கோபம்
இதனால் அவினாஷ் மீது கோபம் அடைந்த ஸ்ரீலஷ்மி, கையில் விஷ பாட்டிலை வைத்துக்கொண்டு நீங்கள் துபாய்க்கு செல்ல வேண்டும் என்று மிரட்டி உள்ளார். அதோடு விஷத்தை வாயில் ஊற்றி அதை விழுங்காமல் கணவனை prank செய்துள்ளார். இதனால் பதறிப்போன அவினாஷ் நான் கண்டிப்பாக துபாய் செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு ஸ்ரீலஷ்மி என் தலையில் அடித்து சத்தியம் பண்ணுங்கள் என்று கூறி இருக்கிறார்.

சத்தியம்
ஸ்ரீலஷ்மி வாயில் விஷம் இருக்கும் போது அவினாஷ் அவரின் தலையில் அடித்து சத்தியம் செய்தார். அந்த வேகத்தில் விஷத்தை தவறுதலாக ஸ்ரீலஷ்மி குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீலஷ்மி அங்கே சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த நிலையில் அவினாஷிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications