கேரளாவை மீண்டும் கைப்பற்றும் இடதுசாரிகள்.. பினராயி விஜயன், கேகே ஷைலஜா என முக்கிய தலைவர்கள் முன்னிலை
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா என இடதுசாரி முக்கிய தலைவர்கள் முன்னணியில் உள்ளனர்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளைத் தொடர்ந்து தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
கேரளாவில் இடதுசாரி தலைவர்கள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ளனர். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடதுசாரிகள்
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளில் உள்ளன. அதில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 71 இடங்கள் தேவை. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இடதுசாரிகள் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடக் கூடுதல் இடங்களிலேயே முன்னிலை வகித்தது. இன்று முழுவதும் இதே நிலை தொடர்ந்ததால் கேரளாவில் இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சி அமைப்பது நிச்சயம்.

அமைச்சர்கள் முன்னிலை
கேரளா முதல்வர் பினராயி விஜயன், சுகாதார துறை அமைச்சர் கே கே ஷைலஜா உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர். தர்மடம் தொகுதியில் பினராயி விஜயனும், மட்டன்னூர் தொகுதியில் கேகே ஷைலஜாவும் முன்னிலையில் உள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள் கேரளாவில் முன்னிலையில் உள்ளனர்.

எத்தனை இடங்கள்
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் தற்போது இடதுசாரிகள் கூட்டணி 94 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 58 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. கேரளா காங்கிரஸ் (எம்) 6 இடங்களிலும் இதர கூட்டணிக் கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

காங்கிரஸ் பாஜக
அதேபோல, காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோல கேரளா காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் இதர கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல நேமம், பாலக்காடு, மஞ்சேஸ்வரம் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications