கேரளாவில் மலரும் தாமரை.. இந்தியா கூட்டணிக்கு காத்திருக்கும் ஷாக்.. இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவு
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் தாமரை மலரும் என்று ஏபிபி சிவோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கேரளாவில் அரசியல் 2 மிகப் பெரிய கூட்டணிகளால் நடத்தப்படுகிறது. மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF). இன்னொன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF).

இந்த இரு கூட்டணிகளுமே கேரளாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பாஜக இதுவரை வெற்றிக்கணக்கை தொடங்கியதே இல்லை. இந்த லோக்சபா தேர்தலில் எப்படியாவது வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டும் என்ற பாஜக பல்வேறு வியூகங்களுடன் பிரசாரத்தை மேற்கொண்டது. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக இங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது. ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஏபிபி சிவோட்டர் கேரளாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில், பாஜக இந்த முறை வெற்றிக்கணக்கை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கூட்டணி 17 முதல் 19 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணி 1 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது.
ஏபிபி சிவோட்டர் கருத்துக்கணிப்பு
கேரளாவில் மொத்த லோக்சபா தொகுதிகள்: 20 இடங்கள்
* காங்கிரஸ் கூட்டணி: 17 - 19 இடங்கள்
* பாஜக கூட்டணி: 1 - 3 இடங்கள்
* எல்.டிஎப் கூட்டணி: 0.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications