Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புல்மேட்டில் இருந்து சபரிமலை செல்ல பக்தர்களுக்குத் தடை - இடுக்கி ஆட்சியர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் நாளை நடைபெறவுள்ளது. புல்மேடு பகுதியில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்கிருந்து சபரிமலை செல்ல தடை விதித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சபரிமலை மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறவுள்ளது. தரிசனத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இன்றும், நாளையும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

sabarimalai devottes

நாளை காலை 7 மணி முதல் நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 மணிக்குமேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். சபரிமலை மகரஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், புல்மேடு பகுதியில் இருந்து மகர ஜோதியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்கிருந்து சபரிமலை செல்ல தடை விதித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இடுக்கி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மகர ஜோதியை தரிசனம் செய்வற்காக சத்திரம் பகுதியில் இருந்து நடந்து சென்று புல்மேடு பகுதியில் இருந்து ஜோதியை தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வாறு மகர ஜோதியை தரிசனம் செய்யும் பக்தர்கள் புல்மேட்டில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லக் கூடாது. மீண்டும் சத்திரம் பகுதிக்கே திரும்பிச் செல்ல வேண்டும். இந்த உத்தரவை மீறி சபரிமலை செல்வதற்கு முயற்சி மேற்கொள்வரை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனவிலங்குகள் அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புல்மேட்டில் இருந்து பார்த்தால் சபரிமலையின் சன்னிதானம் தெரியும். இதற்கு அருகில் உள்ள மலையில் மகர ஜோதி தெரியும் என்பதால் தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஜனவரி 14 ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை புல்மேடு பகுதியில் இருந்து சபரிமலைக்குச செல்லலாம்.

மகரஜோதி பூஜைக்காக ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாபரணப் பெட்டி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சந்நிதானம் கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு ஆபரணம் அணிவிக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். அப்போது, பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தோன்றும்.

மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகம். மகர ஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+