ஆபாச பேச்சு.. மலையாள நடிகையை ஹோட்டலுக்கு அழைத்த அரசியல்வாதி.. கேரளாவில் பெரும் பரபரப்பு
திருவனந்தபுரம்: மலையாள நடிகையான ரினி அன் ஜார்ஜ்க்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி ஹோட்டலுக்கு அரசியல்வாதி ஒருவர் அழைத்துள்ளார். இதுதொடர்பாக நடிகை ரினி அன் ஜார்ஜ் வெளிப்படையாக பேசி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இது கேரளா அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
நடிகைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தொடர்ந்து வருகிறது. ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை பலரும் நடிகைகளிடம் அத்துமீறி நடக்கும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்நிலையில் தான் கேரளாவில் நடிகை ரினி அன் ஜார்ஜை பிரபலமான கட்சியை சேர்ந்த இளம் தலைவர் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மலையாள நடிகையாக இருப்பவர் ரினி அன் ஜார்ஜ். இவர் பத்திரிகையாளராக இருந்து நடிகையாக மாறியவர். இந்நிலையில் தான் ரினி அன் ஜார்ஜை தவறான கண்ணோட்டத்தில் பிரபல அரசியல்வாதி பேசி உள்ளார். அந்த அரசியல்வாதி அடிக்கடி அவருக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
ஹோட்டலுக்கு அழைத்த அரசியல்வாதி
ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை ரினி அன் ஜார்ஜ் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அந்த அரசியல்வாதி தனது செயலை மாற்றி கொள்ளவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகை ரினி அன் ஜார்ஜை அவர் ஹோட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார்.
இதனால் கோபமான நடிகை ரினி, அவரை கண்டித்துள்ளார். கட்சி மேலிடத்திடம் புகார் அளிப்பதாக மிரட்டி உள்ளார். அதற்கு அரசியல்வாதி பயப்படவில்லை. முடிந்தால் கட்சி மேலிட தலைவர்களில் போய் புகார் அளிக்கும்படி சவால் விடுத்துள்ளார்.
அரசியல்வாதி மகள்களுக்கும் தொல்லை
இதுதொரட்பாக நடிகை ரினி வெளிப்படையாக பேசிவிட்டார். அரசியல்வாதியின் பெயரை அவர் கூறாமல் தனக்கு நேர்ந்த சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். மேலும் கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்தபோது அந்த அரசியல்வாதி நடிகை ரினிக்கு மட்டுமின்றி கட்சியில் உள்ள நிர்வாகிகளின் மனைவி மற்றும் மகள்களுக்கும் இப்படி தொல்லை கொடுதது வந்துள்ளது தெரியவந்துள்ளது.
வலைதளங்களில் பேசுவதாக உறுதி
இதுபற்றி, ரினி கூறுகையில், ‛‛தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை கூட பாதுகாக்க முடியாத இந்த அரசியல்வாதிகள் எந்த பெண்ணை பாதுகாப்பார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன்?. இதுபற்றி புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் சமூக ஊடகங்களில் பல பெண்கள் இதே போன்ற பிரச்சனைகளை பேசி வருகின்றனர். இதனால் நானும் பேச முடிவு செய்துள்ளேன்" என்றார். ஆனால் அந்த அரசியல்வாதி யார் என்று அவர் கூறவில்லை.
காங்கிரஸ் எம்எல்ஏவவை குறிவைத்த பாஜக
இதற்கிடையே தான் பாஜகவினர் காங்கிரஸ் கட்சியின் பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் என்பவரை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பாலக்காட்டில் உள்ள அவரது அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். மேலும் அவர் தான் பெண்களிடம் தவறான நடத்தையை வெளிக்காட்டி வருவதாக கூறி உள்ளனர்.
நடிகை ரினி ராகுல் மம்கூத்ததில் பெயரை கூறாத நிலை் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். பாஜகவினர் கூறும் ராகுல் மம்கூத்ததில் காங்கிரஸ் கட்சியில் வளர்ந்து வரும் தலைவராக உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநில இளைஞர் அணியின் தலைவராக உள்ளார்.
பெண் எழுத்தாளர் கூறிய தகவல்
பாஜகவின் இந்த போராட்டத்தை தொடர்ந்து எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும், காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில்லை டார்க்கெட் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மெசேஜ் அனுப்பி வருகிறார். வக்கிரமாக பேசுகிறார். எங்களை மோசமாக சித்தரிக்கும் சைக்கோ போல் செயல்படுகிறார். காங்கிரஸ் கட்சியில் செயல்படும் பெண்களிடம் இருந்து நிறைய புகார்கள் சென்றாலும் அவர் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கவில்லை '' என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி எதிர்க்கட்சி தலைவர் (காங்கிரஸ்) விடி சதீசன் கூறுகையில், ‛‛கட்சிக்கு இப்போது தான் புகார் வந்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications