சீரியல் சூட்டிங்கில் சீரழிச்சுட்டாங்க.. பிரபல நடிகர்கள் மீது புகார் கொடுத்த நடிகை! இவர்களா? ஷாக்..!
திருவனந்தபுரம்: சினிமாவில் வாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள சீரியல் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதை அடுத்து பிரபல நடிகர்களான பிஜு ஷோபானம், ஸ்ரீகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிது காலம் மலையாளத் திரையுலகில் பாலியல் புகார் சம்பவங்கள் சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது நடிகை ஒருவர் மீண்டும் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளம் மட்டுமல்ல இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மல்லுவுட் என அழைக்கப்படும் மலையாள திரை உலகில் நடிகர்கள் இயக்குனர்கள் நடிகைகளை பாலியல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டதும், மறுத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி வைத்ததும்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ஒருவரே ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஹேமா கமிட்டி:
தொடர்ந்து இந்த வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு பிறகாக மலையாள திரையுலகில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடிகைகள், நடிகர்கள் இயக்குனர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது, மறுத்தவர்கள் திரை உலகில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக பகீர் புகார் எழுந்தது.
பாலியல் புகார்:
இதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் நடிகைகளும் இடம் பெற்று இருந்தனர். இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஐந்தாண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்தது. ஆனால் தற்போது தான் அது வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் மலையாளத் திரை உலகை சில இயக்குனர்கள் நடிகர்கள் முடிசூடா மன்னர்கள் போல ஆண்டு வந்ததும், நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது.
சிக்கிய நடிகர்கள்:
இந்த அறிக்கை வெளிவந்ததிலிருந்தே பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்ட நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிகிறது. மேலும் பல நடிகர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது. சில நடிகள் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் புகார்களை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களாக இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நடிகை புகார் அளித்துள்ளார்.
மீண்டும் பாலியல் புகார்:
தற்போது மலையாளத் திரையுலகில் சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வரும் பிஜூ ஷோபானம் மற்றும் ஸ்ரீகுமார் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சீரியல் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்திருக்கிறார். சீரியல் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டிருந்தபோது நடிகர் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு:
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்திய நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்ஃபோ பார்க் காவல் துறையினருக்கு அறிவுறுத்தினர். இதை அடுத்து நடிகர்கள் பிஜூ ஷோபானம், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நடிகர்கள் மீது புகார் கொடுத்த அந்த நடிகை தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. புகார் அளித்ததற்காக அந்த நடிகை சீரியலில் இருந்து விலக்கப்பட்டதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications