கேரளாவில் 2 வயது குழந்தைக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6-ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
சீனாவையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் பரவியது. சீனாவில் தங்கி படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதியானது.

5 பேர்
இதையடுத்து அவர்களுக்கு அந்த மாநிலத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையின் பலனாக 3 பேரும் கொரோனா வைரஸிலிருந்து மீட்டனர். இந்த நிலையில் இத்தாலிக்கு சென்றுவிட்டு கேரளா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.

இத்தாலிக்கு சுற்றுலா
இவர்கள் பத்தினம்திட்டாவை சேர்ந்தவர்கள். 5 பேரில் 3 பேர் இத்தாலியிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். அந்த குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் ஆகிய 3 பேரும் கடந்த மாதம் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள். இதில் அவர்கள் இத்தாலிக்கு சென்று உள்ளனர்.

மோசம்
கொரோனா வைரஸ் வேகமாகவும் மோசமாகவும் பரவி வரும் நிலையில் இவர்கள் இத்தாலியில் பல இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். இந்த நிலையில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு கொச்சி விமான நிலையத்திற்கு வந்த அவர்கள் தாங்கள் இத்தாலிக்கு சென்றதை தெரிவிக்கவில்லையாம். இதனால் இவர்களை சோதனை நடத்தாமல் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

6ஆவது நபர்
வீட்டுக்கு வந்த அவர்களுக்கு காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மற்ற இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த 5 பேரும் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனிடையே 6 ஆவதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெற்றோருடன் இத்தாலிக்குச் சென்றுவிட்டு கேரளா திரும்பிய 2 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications