காலியாகி வரும் கொரோனா.. இன்றைய நாள்.. கேரளாவுக்கு மிகக்சிறந்த நாள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 387 என்றும், தற்போது 167 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக குறைந்து வரும் மாநிலம் என்றால் அது கேரளா தான்.
அண்மைக் காலமாக கேரளாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. நேற்று முன்தினம் 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

மோசமான பாதிப்பு
ஆரம்ப காலத்தில் கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவதால் கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பாதிப்பை சந்தித்த மாநிலமாக கேரளா இருந்தது. இதனால் இந்தியாவிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதித்த மாநிலமாக கேரளா விரைவிலேயே உருவெடுத்தது.

பின்வரிசைக்கு போனது
ஆனால் எல்லாம் மார்ச் மாத இறுதி வரை மட்டுமே. அதன்பிறகு அதாவது ஏப்ரல் பிறந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. சிறப்பான சுகாதார நடவடிக்கையால் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்ற கேரளா இன்று டாப் 10 மாநிலங்களில் கடைசி இடத்திற்கு சென்றுவிட்டது. அதேநேரம் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் முன் வரிசைக்கு வந்தன.

ஒரு சதவீதம் உயிரிழப்பு
கேரளாவிலேயே அதிகபட்சமாக காசர்கோட்டில் 166 பேரும் கண்ணூரில் 75 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு பெரும்பாலானோர் குணமாகி உள்ளனர். கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டும் இது வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை 387 பேர் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துவிட்டனர்.

ஒருவர் மட்டுமே பாதிப்பு
தற்போதைய நிலையில் 167 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று கேரளாவுக்கு சிறந்த நாளாக அமைந்துள்ளது. ஏனெனில் கேரளாவில் கொரேனாவுக்கு இன்று ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். கண்ணூரைச் சேர்ந்தவருக்கு கொரோனா பாதித்து உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகப்படியாக கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 218 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரோனா இல்லாத கேரளா
கேரளா மிக விரைவாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை கிராமம் முதல் நகரம் வரை மிக வலுவாக உள்ளதே காரணமாகும். அத்துடன் அரசு சொன்னபடி நடந்து கொண்டு சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த. வார இறுதிக்குள் (ஏப்ரல் 18) கொரோனா பாதிக்காத நாளை கேரளா எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உள்ளதால் இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாகவும் கேரளா மாற அதிக வாய்ப்பு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications