உதயமாகிறார் இன்னொரு விஜயதாரணி! காங்கிரசிலிருந்து "பெரிய தலையை" தட்டி தூக்கும் பாஜக!
திருவனந்தபுரம்: மறைந்த, கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பத்மஜா வேணுகோபால் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு பத்மஜா வேணுகோபால் காங்கிரஸை விட்டு வெளியேறக்கூடும் என்று பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2021 இல் நடந்த சட்டசபை தேர்தலில் திருச்சூரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றவர் பத்மஜா. இதையடுத்து அப்போது முதலே இதுபோன்ற தகவல் பரவுகிறது. இப்போது அது வேகம் எடுத்துள்ளது. ஒருவகையில் நம்மூர் விஜயதாரணி மாதிரிதான் பத்மஜா பெயரும் அங்கு தொடர்ந்து அடிபடுகிறது. விஜயதாரணி பாஜக போவார் என செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்த நிலையில் கடைசியில் அது நடந்துவிட்டது.

பத்மஜா வேணுகோபால் காங்கிரஸில் முக்கிய தலைவராவார். அதன் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். இருப்பினும், மாநிலத் தலைமையுடனான அவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார். விஜயதாரணியை போலவே இவரும் காங்கிரசில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று பேசியுள்ளார்.
பெண் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டுமென்றே முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இருப்பினும் கட்சி தாவப்போவதில்லை என்று விஜயதாரணி போலவே இவரும் இதுவரை கூறிவருகிறார். தான் நெருப்பு என்றும் பாஜக தன்னை நெருங்க முடியாது என்றும் சொன்னவர் விஜயதாரணி. அதே பாணியில், காங்கிரஸை விட்டு வெளியேறுவது குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த பத்மஜா, "என்னால் இன்று நடப்பதை பற்றியே ஒழுங்காக சொல்ல முடியாது, நாளை பற்றி நான் எப்படி கூற முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக மொத்தம் கேரளக் கரையில் ஒரு விஜயதாரணி உதயமாகிறார்!
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications