உள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்
Recommended Video
திருவனந்தபுரம்: "நான் ஒரு பொருளை ஒளிச்சி வெச்சிருக்கேன்.. அது என்னன்னு தெரியுமா" என்று ஜோலி சொல்லவும் போலீசார் அதிர்ச்சியாகி நின்றனர்.
சொத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை ஆட்டுக்கால் சூப்பில் சயனைடு வைத்து கொன்றார் ஜோலி என்ற 47 வயது பெண். 17 வருடங்களுக்கு முன்பு இந்த கொலைகளை செய்த ஜோலி இப்போது கைதாகி விசாரணையில் உள்ளார்.
சொத்துக்காக கொலை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள்.

மாமியார்
மாமனாருக்கு காபியில் விஷம்... மாமியாருக்கு சூப்பில் விஷம்.. குழந்தைக்கு சாப்பிடும் பிரட்டில் விஷம்.. என சயனைடு கலந்து கொடுத்து சாகடித்துள்ளார். இவர்கள் எல்லாருமே ஜோலியை நம்பி அவர் தந்த சாப்பிட்டை சாப்பிட்டே செத்து போயுள்ளனர். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருந்திருக்கிறார்.

ஜோலி
சொத்துக்காக இந்த கொலைகளை செய்ததாக சொல்லும் ஜோலி மற்றும் மேத்யூ, பிரஜிகுமார் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். ஜோலியை வழக்கமாக செல்லும் பியூட்டி பார்லர், கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றும் போலீசார் விசாரித்தனர்.

வாக்குமூலம்
ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வயிற்றில் புளியை கரைப்பதுபோல உள்ளது. 5-வது நாள் விசாரணையும் நேற்று நடந்தது. அப்போது "கூடத்தாயியில் உள்ள வீட்டில் ஒரு முக்கியமான பொருளை மறைச்சு வெச்சிருக்கேன்" என்று ஜோலி என்னதுமே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சயனைடு
அது என்ன பொருள் என்று போலீசார் கேட்டனர். "ஒன்னுமில்லை.. 6 பேரை கொன்னுட்டோமே.. ஒருவேளை போலீசில் சிக்கினால் நானும் அதே சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.. அதற்காகத்தான் எனக்குகொரு டப்பா சயனைடை வாங்கி அந்த வீட்டில் வெச்சிருக்கேன்" என்றார்.

சோதனை
இதையடுத்து, போலீசார் ஜோலி சொன்ன அந்த வீட்டுக்கு ராத்திரியோடு ராத்திரியாக ஜோலியை அழைத்து கொண்டு ஓடினர். அந்த வீட்டில் சோதனையும் செய்தனர். அப்போதுதான் கிச்சனில் மற்ற பாத்திரங்களுக்கு நடுவே ஒரு சின்ன பாட்டிலில் சயனைடு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த பாட்டிலுக்கு ஒரு துணியை போர்த்தி மூடப்பட்டு இருந்தது.

ஜோலி
இதையடுத்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இந்த சயனைடு பாட்டில்தான் போலீசாருக்கு கிடைத்த முக்கிய துருப்பு சீட்டாக உள்ளது. ஏனெனில் இதற்கு முன்பு ஜோலி வீட்டில் வெறும் சயனைடு இருந்த டப்பாக்கள்தான் கிடைத்தது. கொஞ்சமாக இருந்த சயனைடும் உறுதி செய்வதற்காக லேப்-புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை
இந்த சமயத்தில் ஒரு டப்பா நிறைய சயனைடு கிடைத்திருப்பது போலீசாருக்கு பெரிய அளவில் இந்த கேஸில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் நடக்க இருக்கும் விசாரணைகளில் என்னென்ன ஜோலி சொல்ல போறாரோ.. என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications