'ஆரஞ்சு அலர்ட்..' கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரும் 16ஆம் தேதி வரை கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், வயநாடு உள்பட 9 கேரள மாவட்டங்களுக்கு அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை
மேலும், அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 குழந்தைகள்
பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அடூரில் இரவு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மலையாள செய்தியாளர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கரிப்பூரில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 மாத கைக்குழந்தையும் 7 வயது சிறுமியும் உயிரிழந்தனர்..வீட்டின் மற்றொரு புறத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
Recommended Video

4 பேர் பலி
தெற்கு கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார். இப்படி பல்வேறு விபத்துகளில் குறைந்தபட்சம் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கன்ட்ரோல் ரூம்
அதிகபட்சமாக மல்லபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் 254 மிமி மழைப் பதிவாகியுள்ளது. மேலும், கோழிக்கோட்டில் 216 மிமி மழையும், கன்னூரில் 166 மிமி மழையும் பதிவாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களுக்கு உதவும் வகையில் அங்கு கன்ட்ரோல் ரூம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications