ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் ஜிக்கா.. கேரளாவில் அதிகரிக்கும் கேஸ்கள்.. மேலும் 4 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஜிக்கா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா இரண்டாம் அலை கேஸ்கள் குறையாமல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் ஜிக்கா வைரஸ் கேஸ்கள் அங்கு அதிகரித்து வருகிறது.
நேற்று வரை கேரளாவில் பத்து கேஸ்கள் கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். இதனால் கேரளாவில் மொத்த ஜிக்கா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை
அங்கு பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் இன்னும் பலரை சோதனை செய்ய கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கேரளாவில் ஜிக்கா வைரஸ் பரவல் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறையின் 6 பேர் கொண்ட குழு அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளது.

அறிவுரை
ஜிக்கா வைரஸ் குறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் இது தொடர்பாக அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். ஜிக்கா வைரஸை பரப்பும் கொசுக்களை அழிப்பது தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறோம் என்று கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

வீணா ஜார்ஜ்
திருவனந்தபுரத்தில் நேற்று குழந்தை பிரசவித்த பெண் ஒருவருக்கும் ஜிக்கா வைரஸ் தாக்கி உள்ளது. காய்ச்சலோடு அனுமதிக்கப்பட்ட இவருக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஜிக்கா வைரஸ் கிட்டத்தட்ட டெங்கு வைரஸ் போன்றதாகும். இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பரவ கூடியது. உடலில் தடிப்புகள், காய்ச்சல், தோல் சிவப்பது. எலும்பு வலி ஆகியவை ஜிக்கா வைரஸ் ஏற்பட்டால் உண்டாகும்.

பிரேசில்
பிரேசிலில் 2015ல் பலருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட பாதிப்பில் கர்ப்பிணிகள் பலர் நோய் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் குழந்தைகள் பலர் மோசமான உடல்நிலையுடன், பாதிப்புகளுடன் பிறந்தது. ஜிக்கா வைரஸ் கொசுக்கள் மூலம் மட்டுமின்றி, இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொண்டாலும் பாதிப்பு ஏற்படும்.

எங்கு
உகாண்டாவில் 1947ல் குரங்குகளுக்கு இந்த வைரஸ் தாக்கியது. 1952ல் பின் மனிதர்களுக்கு தாக்கியது. பின்னர் பல்வேறு ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கு கொசுக்கள் மூலம் பரவியது குறிப்பிடத்தக்கது. உடலுறுவு மூலம் கர்ப்பிணிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் னாய் கட்டுப்பாட்டு துறை நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா
அங்கு ஜிக்கா வைரஸ் ஒரு பக்கம் பரவும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா கேஸ்களும் குறையாமல் பரவி வருகிறது. கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு இன்னும் குறையவில்லை. அங்கு இன்று 13,563 கேஸ்கள் பதிவாகி உள்ளது. ஆக்டிவ் கேஸ்கள் 1,13,120 ஆக உள்ளது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கேஸ்களில் கிட்டத்தட்ட 30% கேஸ்கள் தற்போது கேரளாவில் இருந்து மட்டுமே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications