ஒரே வீட்டிற்குள்.. ஒரே நாளில்.. ஒரே மாதிரி.. இப்படியெல்லாம் கூட நடக்குமா.. ஆச்சரியம் தரும் ட்வின்ஸ்
ஒரே வீட்டிற்குள்.. ஒரே நாளில்.. ஒரே மாதிரி.. இப்படியெல்லாம் கூட நடக்குமா.. ஆச்சரியம் தரும் ட்வின்ஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே வீட்டுக்குள் நடந்த சம்பவம் ஒன்று, பொதுமக்களுக்கு அதிசயத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இரட்டையர்கள் பற்றி நிறைய செய்திகளை நாம் கேள்விப்பட்டதுண்டு.. கேரளாவில் இரட்டையர்கள் நிறைந்த கிராமமே இருக்கிறதாம்.. 2000ம் பேர் மட்டும் வசிக்கும் அந்த கிராமத்தில் 500 பேர் இரட்டையர்கள் இருக்கிறார்கள்.. இது மரபணு காரணமாக ஏற்படக்கூடும்.
அதுமட்டுமல்ல, பொதுவாக இரட்டையர்கள் பிறந்தால், அவர்களின் திருமணமும் ஒரே நேரத்தில் பெற்றோர்கள் நடத்தி வைப்பது இயல்பு.. அந்தவகையில் இதே கேரளாவில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது..

கோட்டயம்
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ளது தலயோல பரம்பு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் சந்திரசேகர் நாயர்... இவர் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார்.. மனைவி பெயர் அம்பிகா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரு மகள்கள்.. இருவருமே இரட்டை சகோதரிகள்... இருவருமே சின்ன குழந்தையில் இருந்தே ஒன்றாக விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.. இருவருக்கும் திருமண வயது எட்டியது..

திருமணம்
பிறகு மகள்களின் விருப்பப்படி இருவருக்குமே மாப்பிள்ளை பார்த்தனர் பெற்றோர்.. இருவருக்குமே ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி, ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது... இருவரும் கர்ப்பமானார்கள்.. பிறகு தாங்கள் பிறந்த ஆஸ்பத்திரியிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று இருவரும் ஆசைப்பட்டனர்..

ஸ்ரீபிரியா
அதனால், இருவருமே அதே ஆஸ்பத்திரிக்கு மாதாமாதம் செக்கப் வந்து போனார்கள்.. இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.. அதனால் அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்... பிறகு கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஸ்ரீலெட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.. அடுத்து, அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பூரிப்பு
இதையடுத்து, சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.. மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் பெண் குழந்தை பிறந்தது... இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை குடும்பத்தினருக்கும், சுற்றுவட்டார பகுதிகளுக்கும் ஏற்படுத்தியது.. இந்த சம்பவம்தான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. பிறந்த குழந்தைகள் 2 பேருக்குமே ஒரே குரூப் ரத்தமாம்.. அதுவும் "ஓ" பாசிட்டிவ்..!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications