இதுதான் ‛லக்’.. ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய கோவில் அர்ச்சகர்.. கைக்கொடுத்த கேரளா லாட்டரி!
திருவனந்தபுரம்: ‛நான் அடிச்ச மணி கடவுளுக்கே கேட்டுடிச்சி பாத்தியா’ என்ற வகையில் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார் கோவில் அர்ச்சகர். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எண் வித்தியாசத்தில் லாட்டரியில் ரூ.70 லட்சத்தை தவறவிட்ட இந்த கோவில் அர்ச்சகர் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.
நம் மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் உழைக்கும் காசில் லாட்டரி வாங்கி பணத்தை இழந்தது தான் முக்கிய காரணமாகும்.

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைமுறையில் உள்ளது. அரசு அனுமதியுடன் இந்த லாட்டரி சீட் விற்பனை நடந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.
குறிப்பாக ஓணம் உள்பட சில முக்கிய பண்டிகை நாட்களில் பரிசு தொகை என்பது அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பரிசுத்தொகை லட்சம், ஒரு கோடி வரை இருக்கும். இந்நிலையில் தான் Fifty Fifty லாட்டரிக்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் FT 506060 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்தது.
இந்த லாட்டரியை கோவில் அர்ச்சகர் மதுசூதனன் என்பவர் கிருஷ்ணா லாட்டரி ஏஜென்ஸியில் இருந்து வாங்கியிருந்தார். இதனால் கோவில் அர்ச்சகரான மதுசூதனன் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார். இவர் மேப்பாறை பகுதியில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் 20 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
தற்போது லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு தொகை வென்றுள்ள அர்ச்சகர் மதுசூதனனுக்கு அதிரா என்ற மனைவியும், வைஷ்ணவி, வைகாலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். இதனால் மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஏனெ்னறால் மதுசூதனன் அவ்வப்போது லாட்டரி வாங்கி அதிர்ஷ்டத்தை நம்புவது உண்டு.
இதுவரை அவருக்கு சிறிய சிறிய தொகை தான் பரிசாக கிடைத்து வந்தது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுசூதனன் வாங்கிய லாட்டரி சீட்டின் ஒரு எண் வித்தியாசத்தில் ரூ.70 லட்சம் பரிசுத்தொகை என்பது தவறிப்போனது. இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் கவலையடைந்தனர்.
ஆனாலும் கூட அதிர்ஷ்ட காற்று ஒருமுறையாவது தன்னை நோக்கி வீசும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அர்ச்சகர் மதுசூதனன் லாட்டரி வாங்கி வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது அவரை கோடீஸ்வரராக மாற்றி உள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications