திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபரிமலையில் கூடுதல். பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா?. நாளை உயர்மட்ட குழு கூட்டம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பக்தர்கள் யாத்திரை தொடர்பாக தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.சபரிமலைக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

அண்மையில் சபரிமலை கோயில் ஊழியர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்தது குறித்தும், சபரிமலை ஆலயத்தில் அனுமதிக்கப்பட்ட யாத்ரீகர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னர் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

The high-level committee will review the progress of Sabarimala pilgrimage on Monday

திருவிதாங்கூர் தேவஸவம் போர்டு தலைவர் என் வாசு இது பற்றி கூறுகையில் " சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேவஸ்வம் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம், இது நல்ல முடிவுகளை அளித்தது. கடந்த இரண்டு நாட்களில் ஊழியர்களிடையே புதிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாங்கள் ஊழியர்களுக்கு தனி அறைகளை வழங்கியுள்ளோம், அத்துடன் சமூக இடைவெளியை உறுதி செய்துள்ளோம்.

இருமுடி தாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம் - சபரிமலை யாத்திரை இருமுடி தாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம் - சபரிமலை யாத்திரை

சபரிமலை மற்றும் குருவாயூர் கோயிலின் சூழ்நிலைகள் வேறுபட்டவை . சபரிமலையல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. குருவாயூர் ஒரு கோயில் நகரம், அங்கு நிரந்தரமாக ஏராளமான மக்கள் வகிக்கிறார்கள். அதே நேரத்தில் சபரிமாலாவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் இல்லை. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை கொடுக்கும் யாத்ரீகர்களை மட்டுமே சபரிமலை சன்னதிக்கு அனுமதிக்கிறோம். அனைத்து ஊழியர்களையும் பரிசோதிக்க சனிக்கிழமை சபரிமலையில் மிகப்பெரிய அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது, "என்று வாசு கூறினார்.

The high-level committee will review the progress of Sabarimala pilgrimage on Monday

தேவஸம் போர்டை பொறுத்தவரை, கோயிலில் அனுமதிக்கப்பட்ட யாத்ரீகர்களின் எண்ணிக்கையை தினசரி உயர்த்துவதற்கான முடிவில் இருக்கிறது. சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் தினசரி வருமானம் ஒரு நாளைக்கு 10 லட்சத்திலிருந்து 19 லட்சமாக உயர்ந்துள்ளது. நிலைமையை மறுஆய்வு செய்த பின்னர் உயர் மட்ட குழுவினால் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க முடிவு எடுக்கப்பட உள்ளது.

English summary
The high-level committee on pilgrimage, chaired by Chief Secretary Vishwas Mehta, will review the progress of Sabarimala pilgrimage on Monday. The meet will review the steps taken to control the spread of Covid-19 after the recent spike in cases among employees and the demand to further increase the daily number of pilgrims allowed at the hill shrine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X