Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அடி பிலிவர் அடி'.. உணர்ச்சி பெருக்கின் உச்சியில் கேரளா! அர்ஜென்டினாவை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கத்தாரில் நடைபெற்ற FIFA 2022 உலக கால்பந்து கோப்பை போட்டியில் அஜெர்டினா வெற்றி பெற்ற நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நேற்றிரவு வெற்றி கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

இந்தியா இந்த போட்டியில் பங்கேற்காத நிலையில், அர்ஜென்டினாவுக்கு பெரும்பாலான இந்திய மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். குறிப்பாக கேரளாவில் எங்கு பார்த்தாலும் மெஸ்ஸிக்கு போஸ்டர், பேனர் வைத்து அசத்தப்பட்டது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற வேண்டும் என்று மெஸ்ஸியின் கேரள ரசிகர்கள் அரபிக்கடலில் அவருக்கு பேனர் வைத்தனர். இதனையடுத்து அவரின் தீவிர ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் ஆழ்கடலில் மெஸ்ஸிக்கு கட்டவுட் வைத்தனர்.

கேரளம்

கேரளம்

ஆக தொடக்கம் முதலே அர்ஜென்டினா கோஷம் கேரளா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் கேரள மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அர்ஜென்டினா வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை அர்ஜென்டினா தன்வசப்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது 2002ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள்தான் உலக கோப்பையை தொடர்ந்து வென்றிருக்கின்றன. ஆனால், இம்முறை இந்த வெற்றி மூலம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா ஐரோப்பிய நாடுகளின் கனவை தகர்த்தெறிந்துள்ளது. எல்லோரும் பார்ப்பதை போல கேரள மக்கள் வெறும் அர்ஜென்டினா-பிரான்ஸ் என இப்போட்டியை பார்க்கவில்லை.

கண்ணோட்டம்

கண்ணோட்டம்

மாறாக ஐரோப்பிய நாடுகள், அதற்கு எதிரான தென் அமெரிக்க நாடுகள் என்றுதான் போட்டியை பார்க்கின்றனர். காரணம் கடந்த காலகட்டங்களில் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள், அராஜகங்கள் ஆகியவற்றை ரசிகர்கள் மனதில் வைத்திருக்கின்றனர். அதேபோல, இந்த அடக்குமுறைக்கு எதிராக தென் அமெரிக்க நாடுகள் நடத்திய போராட்டங்களையும் அவர்கள் நினைவில் கொண்டிருக்கிறார்கள். ஆக கால்பந்து விளையாட்டின் மூலம் தென் அமெரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகளை பழி தீர்த்துக்கொள்வதாக எண்ணுகிறார்கள். ஏனெனில் கேரளாவில் இடதுசாரி சிந்தனையின் ஆதிகம் இயல்பாக அதிகமாக இருப்பதால் இவர்கள் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவளிக்கின்றனர்.

உற்சாகம்

உற்சாகம்

ஆக நேற்று அர்ஜென்டினா வெற்றி பெற்றதை இம்மக்கள் தங்களுடைய வெற்றியாக கொண்டாடியுள்ளனர். இரவு முழுவதும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி சந்தோஷத்தில் திளைத்திருக்கின்றனர். இது குறித்து அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் கூறுகையில், "அர்ஜென்டினா வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அதேபோல இறுதி சுற்றுக்கு நுழைந்தது. இந்த போட்டியில் ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமமான கோல்களை அடித்திருந்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் எங்களது இதய துடிப்பு சில நிமிடங்களுக்கு அப்படியே நின்றுவிட்டது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா

2014ம் ஆண்டு இழந்ததை இந்த ஆண்டு அர்ஜென்டினா பெறும் என்று நம்பிக்கை கொண்டிருந்தோம். 2018ம் ஆண்டு அர்ஜென்டினாவை வீழ்த்திய அணிகளை இந்த முறை பழிதீர்த்து இறுதிக்கு முன்னேறி கடைசியாக 4-2 என்கிற கணக்கில் நடப்பு சாம்பியனையும் அர்ஜென்டினா வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். இது அர்ஜென்டினாவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமை" என்று கூறியுள்ளார். அதேபோல மற்றொரு அர்ஜென்டினா ரசிகர் கூறுகையில், "2006ம் ஆண்டிலிருந்து இதற்காக நான் காத்திருக்கிறேன். போட்டியை காணும்போது ஒரு நிமிடம் கூட நாங்கள் அமைதியாக உட்கார்ந்து இருக்கவில்லை. எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. சில சமயம் நான் அழுதேன். பல சமயங்களில் சிரித்தேன். இந்த போட்டிதான் மிகச்சிறந்த போட்டி என்று கூறுவேன். அந்த அளவுக்கு தரமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+