தனியார் சொகுசு விடுதியில் அழகான பெண்கள்.. அலைமோதிய ஆண்கள்.. சோதனைக்கு போன போலீசுக்கே தர்ம சங்கடம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள். அங்கு விபச்சாரம் நடத்திய 2 இளம் பெண்கள் மற்றும் கொல்லத்தைச் சேர்ந்த3 பேர் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, விபச்சாரத்தை நடத்துவதே சப்-இன்ஸ்பெக்டர்மற்றும் ஏட்டு என்பது தெரியவந்தது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி கர்ஷக ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஆண்கள் அடிக்கடி அதிகஅளவில் சென்று வருவதாக அக்கம் பக்கத்தினர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் விபச்சாரம் நடப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ரகசியமாக போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து எர்ணாகுளம் மாவட்ட விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த விடுதியில் உள்ள ஒரு அறையில் சோதனை நடத்திய போது கொல்லம் நகரை சேர்ந்த ரஷ்மி, அவரது உதவியாளர்கள் ரிஜோ, மார்டின் ஆகியோர் இருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.அதில் அவர்கள் மற்றொரு அறையில் 2 இளம்பெண்களை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கொல்லம் நகரை சேர்ந்த ரஷ்மி, அவரது உதவியாளர்கள் ரிஜோ, மார்டின் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் போலீஸ்கார்கள் இரண்டு பேர் தான் விபச்சாரத்தை நடத்துகிறார்கள் என்பது தெரியவந்ததை கண்டு ஆடிப்போனார்கள். இதை முதலில் நம்ப மறுத்த போலீசார், என்ன ஆதாரம் உள்ளது என்று தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது அவர்களது 2 வங்கி கணக்குகளில் இருந்து பாலாரி வட்டம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கொல்லம் பகுதியை சேர்ந்த பிரிஜேஷ் லால் மற்றும் எர்ணாகுளம் கிழக்கு போக்குவரத்து காவல் ஏட்டு டி.கே.ரமேஷன் ஆகியோருக்கு பணம் அனுப்பியதும், விடுதியில் போலீசார் விபசாரம் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து பாலாரி வட்டம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரிஜேஷ் லால், போக்குவரத்து காவல் ஏட்டு டி.கே.ரமேஷன் ஆகியோரை கொச்சி போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்தவிவகாரம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கொச்சி மாநநகர போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications