Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முழுசா படிக்கிறேன்; ஸ்டாலின் நல்லா ஒர்க் பண்றார்; வாழ்த்துச் சொன்னதாக சொல்லுங்க; பாராட்டிய பினராயி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருக்கிறார்.

நீட் தேர்வுக்கு எதிரான மு.க.ஸ்டாலின் கடிதத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் வழங்கிய போது அவர் இந்த பாராட்டை தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தாம் முழுமையாக படித்து பார்க்கிறேன் என்ற உறுதியையும் பினராயி அளித்துள்ளார்.

சந்திப்பு

சந்திப்பு

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் அதனை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் அந்த கடிதத்தையும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்க திமுக தரப்பில் டி.கே.எஸ். இளங்கோவன் மூலம் நேரம் கேட்கப்பட்டது.

11 மணிக்கு

11 மணிக்கு

பினராயி விஜயனிடம் அரசியல் உதவியாளராக இருப்பவர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.க்கு ஏற்கனவே அறிமுகமானவர் மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பரும் கூட. இதனால் நீங்களே நேரில் வந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறிய அந்த உதவியாளர், இன்று காலை 11 மணிக்கு பினராயியிடம் நேரம் பெற்றுக் கொடுத்திருந்தார். தாம் மட்டும் சென்றால் அது நன்றாக இருக்காது எனக் கருதிய டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., எல்லை மாவட்ட எம்.பியாக தென்காசி தனுஷ்குமாரையும் உடன் வருமாறு அழைத்துள்ளார்.

இடைவேளை

இடைவேளை

இதையடுத்து இன்று கேரள மாநில திமுக செயலாளர் முருகேசன் சகிதமாக கேரள தலைமைச் செயலகத்தில் பினராயி விஜயனை சந்தித்து ஸ்டாலின் கொடுத்தனுப்பிய கடிதத்தை கொடுக்க டி.கே.எஸ். ஆஜராகிவிட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இடைவேளை நேரத்தில் டி.கே.எஸ். இளங்கோவனை தனது அறைக்குள் அழைத்திருக்கிறார் பினராயி.

10 நிமிடம் தாமதம்

10 நிமிடம் தாமதம்

உங்களுக்கு ஒதுக்கி கொடுத்த நேரத்தை விட 10 நிமிடம் தாதமாகிவிட்டது எனப் பேச்சைத் தொடங்கிய பினராயிடம் ஸ்டாலின் எழுதிய கடிதம் கொடுக்கப்பட்டது. கூடவே ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையும் கொடுக்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் வரை இந்தச் சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று பிற்கபல் 1.30 மணி விமானத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உடனடியாக திருவனந்தபுரத்திலுருந்து சென்னை புறப்பட்டுவிட்டார்.

தனுஷ்குமார் எம்.பி.

தனுஷ்குமார் எம்.பி.

இதனிடையே இந்தச் சந்திப்பில் பங்கேற்ற தென்காசி திமுக எம்.பி. தனுஷ்குமாரிடம் நாம் பேசிய போது, ''கேரளா சி.எம். எங்களிடம் பொறுமையாக பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் நல்லா ஒர்க பன்றார் என்றும் அவருக்கு வாழ்த்துச்சொன்னேன் என சொல்லுங்க எனவும் கூறினார். டி.கே.எஸ். அண்ணன் கொடுத்த அறிக்கையையும், கடிதத்தையும் மேலோட்டமாக பார்த்த அவர் முழுமையாக அவசியம் படிக்கிறேன் என உறுதிக்கொடுத்தார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+