வயநாட்டில் பூமிக்கடியில் கேட்ட சத்தம்.. நிலச்சரிவை தொடர்ந்து திடீர் நிலஅதிர்வு.. அலறி ஓடிய மக்கள்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 100க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் தான் வயநாட்டில் நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் திடீரென்று கேட்ட சத்தத்தால் மக்கள் அலறியபடி வீடுகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் தற்காலிகமாக கிராமங்களை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில் சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மேலும் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 1000க்கும் அதிகமானவர்கள் சிக்கினர். இதில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் 100க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவையே இந்த நிலச்சரிவு உலுக்கி உள்ளது. தேசிய பேரிடராக இந்த நிலச்சரிவை அறிவிக்க கேரளா அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் தற்போது அடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது வயநாடு மாவட்டத்தில் இன்று திடீர் நிலஅதிர்வு என்பது ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு என்பது நென்மேனி கிராம பஞ்சாயத்து பகுதியில் நடந்துள்ளது. அதாவது இன்று காலை 10.15 மணிக்கு நென்மேனி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட குறிச்சிமலை, பினன்கோட், எடக்கால், மூரிக்காப், அம்புகுத்தி மலை, அம்பலவயல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி ஓடியுள்ளனர். மேலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்றனர். விதிரி வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அவர்கள் மக்களுக்கு உத்தரவிட்டதோடு, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலஅதிர்வை தொடர்ந்து அம்பலவயல் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யும்படியும், சம்பவ இடத்தை ஆராயவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலஅதிர்வு குறித்த எந்த தகவலும் எஸ்இஓசி எனும் கேரளா மாநில அவசர ஆபரேஷன் மையத்தில் (SEOC or State Energency Operations Centre) பதிவாகவில்லை. இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‛‛வயநாடு பொழுதன பிராந்தியத்தில் திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. நிலஅதிர்வு தொடர்பாக பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக நிலஅதிர்வு ஏற்பட்டதை அம்பலவயல் மண்டல விவசாய ஆராய்ச்சிமையம் உறுதி செய்து செய்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் சஜிஸ் ஜென் கூறுகையில், ‛‛எங்களின் ஊழியர்கள் திடீரென்று வந்த சத்தத்தை கேட்டுள்ளனர். வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கங்கில் இருந்து சத்தம் கேட்டது. இந்த சத்தங்களுடன் நாங்களும் லேசான அதிர்வை உணர்ந்தோம்’’ என்றார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications