பள்ளி வகுப்பறைகளில் ப வடிவ பெஞ்ச்கள்! எழும் விவாதம்.. ஆனந்த் மகிந்திரா என்ன சொல்லியிருக்கார் பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள உள்ள பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது என்ற முறை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படும் நிலையில், தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது நினைவுகளை பகிர்ந்து இருப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் பெஞ்ச்கள் ஒன்றன் பின் ஒன்றாக போடப்பட்டு இருக்கும். இதில் முதல் பெஞ்சில் இருந்தால் அவர்கள் படிப்பாளி மாணவர்கள் என்றும், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் சேட்டைக்காரர்கள், அதிகம் படிப்பில் ஆர்வம் காட்டாதவர்களாக இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் பொதுவாகவே மக்கள் மத்தியில் பதிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

'ப' வடிவில் அமர வைப்பதால்..
ஆனால், உண்மையில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் பலரும் வாழ்க்கையில் பல உச்சத்தை தொட்டுள்ளார்கள் என்பது நிதர்சனம். அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம். அண்மையில் வெளியான ஒரு மலையாள படத்தின் தாக்கத்தால், பள்ளிகளில் மாணவர்கள் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல், அரைவட்ட வடிவமாக அதாவது ப, யூ வடிவில் மாற்றப்பட்டது.
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது. மாணவர்களை 'ப' வடிவில் அமர வைப்பதன் மூலமாக கல்வியில், கவனத்தில் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ப வடிவ முறை அமலுக்கு வந்துள்ளது.
ஆனந்த் மகிந்திரா கருத்து
பள்ளிகளில் யூ வடிவத்தில் பெஞ்சுகளை மாற்றி அமைப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில்தான் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:- இது ஒரு சுவாரஸ்யமான பரிசோதனை போல தெரிகிறது. வகுப்பறைகளில் சமமான பங்களிப்பு மற்றும் கவனத்தை ஊக்குவிக்கும்.
ஆனால் நான் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். பள்ளிகளில் எனக்கு விருப்பமான இடம் கடைசி பெஞ்ச்தான். இருந்தாலும் எப்போதும் அந்த இடம் ஒதுக்கப்படவில்லை. கல்லூரிகளில் விரிவுரையாளர்களின் விருப்பமாக இருந்ததால், என் உள்ளுணர்வு அங்கேயே அழைத்து சென்று விட்டது. பிசினஸ் பள்ளியில், ஸ்கைடெக் முறை இருந்தது. கடைசி பெஞ்ச் இல்லாமல் போனால் அதை நான் கண்டிப்பாக மிஸ் செய்வேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.
கழுத்து வலி ஏற்படும்
ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளிகளில் ப வடிவில் மாணவர்கள் பெஞ்சை மாற்றி அமைப்பதை சிலர் வரவேற்றாலும், பள்ளிகளில் இதற்கான போதிய இட வசதி இல்லை என்பதே சில ஆசிரியர்கள் கருத்தாக உள்ளது. 25 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்பறைகளில் இந்த முறையை பின்பற்றுவது கடினம் என்றும், 40 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பில் படித்தால் போதிய இடவசதி பல வகுப்பறைகளில் இல்லை என்பதே ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
இதேபோன்று 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்களை அமர வைப்பதால் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் போர்டு (கரும்பலகை) பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும். இதனால், அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும், கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கண்டன குரல்களும் எழுந்துள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications