காரில் கொச்சி மாநகராட்சி அதிகாரி சொப்னா.. அடுக்குமாடி குடியிருப்புவாசிகளால் ஒரே அசிங்கமா போச்சு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கட்டிட ஆய்வாளராக வேலை செய்து வரும் சொப்னா என்பவர், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கதவு எண் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்க வந்ததாக கூறப்படுகிறது. தனது மூன்று குழந்தைகளுடன் காரில் வந்தவரை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர். ஆனால் குழந்தைகள் முன்பு அவரை கைது செய்யாமல் மனிதாபிமானத்துடன் நடந்த அதிகாரிகள், அதன்பிறகு என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் மீது அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த வகையில் கொச்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கட்டிட ஆய்வாளராக 34 வயதாகும் சொப்னா பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். மாநகராட்சி அதிகாரி சொப்னாவிடம் எர்ணாகுளம் மாவட்டம் பொன்னூரணி பகுதியில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் வீடுகளுக்கு கதவு எண் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பத்தை பார்த்த சொப்னா ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், கொச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் சொப்னாவை தொடர்பு கொண்டபோது, லஞ்ச பணத்தை கொடுக்க பொன்னூரனி பாலம் அருகே வருமாறு கூறினாராம்., அங்கு உரிமையாளர் சென்றார். அப்போது காரில் சொப்னா தனது 3 குழந்தைகளுடன் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக உரிமையாளர் கொடுத்தார். இதை அவர் காரில் இருந்தவாறு பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சொப்னாவை பிடித்தனர். காரில் 3 குழந்தைகள் இருந்ததால், அவரை போலீசாரால் உடனடியாக கைது செய்து அழைத்து செல்லவில்லை.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், குழந்தைகளை அவரது கணவரிடம்அனுப்பி வைத்த பின்னரே சொப்னாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications