வயநாடு நிலச்சரிவு.. 25 தமிழர்கள் நிலை என்ன? 5 நாள் ஆகியும் விடை தெரியவில்லை.. தேடும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 25 தமிழர்கள் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை என்றும் இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 130 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு அங்குள்ள மலைக்கிராமங்களை சூறையாடியது. சூரல்மலை - முண்டக்கை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் பல இடங்கள் இருந்த இடம் தெரியாமல் ஆனது. சூரல்மலை - முண்டக்கை இடையே உள்ள பாலம் உடைந்ததால் வெள்ளத்தை கடந்து ராணுவம், பேரிடர் மீட்பு படையினரால் நிலச்சரிவு ஏற்பட்ட மலைக்கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை.

Kerala Wayanad Tamil Nadu

இதனால் சூரல்மலை, முண்டக்கையின் ஒரு பகுதியில் மட்டுமே கடந்த 3 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட முடிந்தது. இதைத்தொடர்ந்து ராணுவத்தினர் தற்காலிகமாக பெய்லி பாலத்தை இரவு, பகலாக அமைத்தனர். அந்த வழியாக மீட்பு வாகனங்களில் சென்று மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 5-வது நாளாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் யாரேனும் சிக்கி உள்ளார்களா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. மலைப்பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனால், மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் தேடுதல் பணியில் திறமை மிக்க தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தன்னார்வலர்களும் மீட்பு பணியில் உள்ளனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்கள் சிக்கியுள்ளார்கள் என்றும், அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சூரமலை, முண்டக்கை, மேப்படை ஆகிய நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழகர்கள் சிலரும் வசித்து வந்துள்ளனர். தமிழகத்தை பூர்விகமாக கொண்டு இங்கு வசித்து வரக்கூடிய தமிழர்கள் மற்றும் தமிழத்தில் தற்போது வசிக்கக்கூடிய தமிழர்களும் இந்த பகுதிக்கு வந்திருக்கின்றனர்.

தமிழர்கள் இங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 2 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 4 நாட்களாக இங்கு முகாம்கள், மருத்துவமனைகள், பாதிக்கப்பட்ட பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று தகவல்களை கேட்டறிந்து, கேரள அதிகாரிகளிடனும் கேட்டறிந்து வருகிறார்கள்.

களத்திற்கே சென்று தமிழர்கள் இங்கு எத்தனை பேர் வசித்து வந்தார்கள், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்ற தகவல்களை கேட்டறிந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 130 பேர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருந்தனர் என்றும், அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்கள் சிக்கியுள்ளனர் என்றும், அவர்களது நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. குடிபெயர்ந்தவர்கள் 22 பேர், தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் 3 பேர் என மொத்தம் 25 தமிழர்களை நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். அவர்கள் இதுவரை மீட்கப்படாததால் அவர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+