திடீரென காரில் தோன்றிய "மர்ம" பெண்.. அடுத்து ஒரு ட்விஸ்ட்.. அலறிய குடும்பம்.. ஒன்னுமே புரியலையே
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு தம்பதி சென்ற காரில் திடீரென மர்ம பெண் தோன்றிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது பெரும் விவாதமான நிலையில், இது குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக கார்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. டூ வீலர்களை காட்டிலும் கார்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் டிராபிக் என்பது தவிர்க்கவே முடியாத பிரச்சினையாகிவிட்டது.

முன்பெல்லாம் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே டிராபிக் பஞ்சாயத்து இருந்த நிலையில், இப்போது சிறு சிறு நகரங்களிலும் கூட டிராபிக் என்பது மிக மோசமான பிரச்சினையாக இருக்கிறது
டிராபிக் போலீஸ்: இப்படி எல்லா ஊர்களிலும் இப்போதெல்லாம் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அபராதங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டிராபிக் ரூல்ஸ் முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய போலீசார் தீவிர வழிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இப்போது உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்களையும் கூட போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக முக்கிய இடங்களில் கேமராக்களை வைத்து அதன் மூலமும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், இதிலும் கூட சில பிரச்சினைகள் இருக்கவே செய்வதாகப் பொதுமக்கள் கூறி வருகின்றனர். ஆனால், இங்கே கேரள மாநிலம் கன்னூரில் நடந்த சம்பவம் ஒரு குடும்பத்தில் மிகப் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்திவிட்டது.
கேரளா குடும்பம்: கண்ணூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் சமீபத்தில் வெளியே சென்றிருந்தார்கள். அப்போது முக்கிய சாலையில் இருந்த சிசிடிவி கேமரா அவர்களைப் படம் பிடித்துவிட்டது. உள்ளே காரில் இருந்த டிரைவர் சீட் பெல்ட் போடவில்லை என்பதே குற்றச்சாட்டு. இது தொடர்பாக அவர்களுக்குச் சலானும் ஆதாரமாக போட்டோவையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது. இதில் என்ன குழப்பம் என்று நீங்கள் கேட்கலாம்.
இதில் விஷயம் என்னவென்றால் காரில் அப்போது சென்றது இரண்டு பேர் மட்டுமே. ஆனால், போலீசார் அனுப்பிய போட்டோவில், மூன்றாவதாக மற்றொரு பெண் பின் சீட்டில் அமர்ந்து இருப்பது போல இருந்தது. பின் இருக்கையில் அந்த தம்பதியின் குழந்தைகள் இருந்த நிலையில், அவர்கள் இந்த போட்டோவில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக இந்த மர்ம பெண் தான் இருந்துள்ளார். இதுவே சர்ச்சைக்குக் காரணம்.
மர்ம பெண்: கேரளாவில் பையனூர் நகரில் உள்ள மேம்பாலத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த எம்விடி என்ற கேமராவில் தான் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. கடந்த அக். 7ஆம் தேதி இரவு 8.27 மணிக்கு இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த மர்ம பெண் படத்தால் நெட்டிசன்கள் அதிர்ச்சியைடந்தனர். பலரும் அந்த மர்ம பெண் பேய், பிசாசாக இருக்கலாம் என்று இஷ்டத்துக்கு அடித்துவிட்டு வருகிறார்கள். பலரும் பல வித அமானுஷ்ய கதைகளையும் சொல்லி வருகிறார்கள். இதனால் அந்த குடும்பமே இப்போது நொந்துபோய் இருக்கிறது.
அடுத்து வந்த ட்விஸ்ட்: இணையத்தில் இது தொடர்பான விவாதம் அதிகரித்த நிலையில், இது குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கும் என்று போலீசார் கூறியுள்ளனர். அதாவது முன்னால் சென்ற வாகனத்தில் இருந்த பெண்ணின் படம் தொழில்நுட்ப கோளாறால் இதில் வந்திருக்கும் என்று போலீசார் கூறுகின்றனர். இருப்பினும் கேமராவை நிறுவிய நிறுவனத்தின் வல்லுநர்கள் வந்தால் மட்டுமே இதற்கான காரணம் என்ன என்பது துல்லியமாகத் தெரிய வரும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications