வானில் நடந்த அதிசயம்.. கடல்நீரை உறிஞ்சி குடித்ததா மேகம்? மிரண்டுபோன மக்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா விழிஞ்சம் கடலை சுற்றி திடீரென சூழ்ந்த கருமேகங்கள் கடல்நீரை அப்படியே உறிஞ்சி மேலே இழுப்பது போன்ற வீடியோ வெளியாகி இணையதளங்களில் வெளியாகி உள்ளது. உண்மையில் கடல்நீரை மேகங்கள் உறிஞ்சி குடிக்குமா?, கடலில் அவ்வப்போது இப்படியான சூழல் ஏற்படுவது ஏன்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

நாம் வாழும் இந்த உலகில் தினமும் பல்வேறு அரிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதில் சில விஷயங்கள் மட்டுமே நமக்கு தெரியும். மேலும் பல விஷயங்கள் நமது கவனத்துக்கு வருவதே இல்லை. குறிப்பாக வானில் தினமும் பல்வேறு விசித்திர நிகழ்வுகள் நடந்து வருகிறது.

kerala vizhinjam sea watespout

அந்த வகையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோ என்பது கேரளா மாநிலம் விழிஞ்சம் கடலில் எடுக்கப்பட்டதாகும்.

அதாவது கேரளா விழிஞ்சம் கடலில் திடீரென்று சுழல் ஏற்பட்டுள்ளது. இந்த சுழல் காரணமாக கடல் தண்ணீர் மேலேழும்பி வானில் இருந்த மழை மேகத்துடன் இணைவது போல் உள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். பலரும் தங்களின் செல்போனில் வீடியோவாக அதனை பதிவு செய்தனர். அந்த வீடியோ தான் தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கேரளா விழிஞ்சம் கடல் நீரை மேகம் உறிஞ்சி குடித்ததாக கூறி வருகின்றனர்.

நாம் சிறு வயது முதலே பூமியில் உள்ள தண்ணீர் ஆவியாகி மேலே செல்லும். அதன்பிறகு மழை மேகம் உருவாகி மழையாக பெய்யும் என்பதை நாம் கேட்டு இருப்போம். ஆனால் இங்கே கடல் நீரை மேகம் நேரடியாக உறிஞ்சி குடிக்கிறது என்ற தகவல் பரப்பப்படுகிறது. இது உண்மையா? வாங்க பார்க்கலாம்.

அதாவது கடல் நீர் ஆவியாகி தான் எப்போதும் மேகத்துக்கு செல்லும். மாறாக சில சந்தர்ப்பங்களில் பருவநிலை மாறுபாடு காரணமாக கடலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். இதனை ஆங்கிலத்தில் ‛waterspout Phenomenon' என்பார்கள். தமிழில் சொல்ல வேண்டும் என்ற நீருற்று நிகழ்வு என்பார்கள். பொதுவாக இதுபோன்ற நிகழ்வு கடல் மற்றும் அதிகளவில் நீர் இருக்கும் இடங்களில் நடக்கும்.

பொதுவாக மழை காலங்களில் வானில் கருமேகங்கள் சூழலும். அந்த மேகங்கள் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால் கடல் மேல் வீசும் காற்று வெப்பமாக இருக்கும். இந்த வேளையில் காற்று சுழற்சி என்பது ஏற்படும். அப்போது கடலின் மேற்பரப்பும், கருமேகங்கள் சூழ்ந்த இடமும் ஒன்றாக இணையும். இந்த சமயத்தில் மேகங்களுக்கு இடையே ஏற்படும் அழுத்த வேறுபாட்டால் புனல் போன்ற தோற்றத்தில் மேகம் கடலில் வந்து விழும். இதனை நாம் பார்க்கும்போது மேகங்கள் கடல் நீரை உறிஞ்சி குடிப்பது போன்று தோன்றும்.

குளிர் மேக காற்று மற்றும் கடல்மேல்பரப்பில் உள்ள சூடான காற்று ஆகியவை சமநிலையை அடையும் வரை இந்த நிகழ்வு நீடிக்கும். சுமார் அரை மணிநேரம் வரை கூட இந்த நிகழ்வு என்பது நீடிக்கும். இந்த நிகழ்வு தான் விழிஞ்சம் கடலில் நடந்துள்ளது. விழிஞ்சம் கடலிலும் கடந்த 30ம் தேதி மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு அரை மணிநேரம் வரை நடந்துள்ளது. விழிஞ்சம் கடற்கரையில் நடந்த இந்த மாற்றத்துக்கு இதுதான் காரணமாகும்.

மற்றபடி மேகங்கள் கடல்நீரை உறிஞ்சி குடிப்பதாக கூறிவிட முடியாது. மேலும் இந்த நிகழ்வு நடக்கும்போது அதன் அருகே பொதுமக்கள், மீனவர்கள் செல்லக்கூடாது. ஏனெ்னறால் இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+