பீறிட்ட "சபலத்தில்" சரிந்த சாம்ராஜ்ஜியம்.. கிட்ட கிட்ட நெருங்கி வந்த பெண்கள்.. திக்குமுக்காடிய தாத்தா
திருவனந்தபுரம்: ஒரு தாத்தா தனிமையில் இருந்திருக்கிறார்.. அப்போது 2 பெண்கள் வீட்டுக்குள் வந்து தாத்தாவிடம் ஆசையாக பேசியிருக்கிறார்கள்.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
சில மாதங்களுக்கு முன்பு, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. இங்கு வசித்து வருபவர் ராஜி... 35 வயதாகிறது.. பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்...

இவருக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் உண்டு.. இதில் ஒரு நண்பர் மூலம், 71 வயது தாத்தா நட்பாகி உள்ளார்.. இந்த தாத்தா ரொம்ப வசதியானவராம்.. 20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவரிடம் ராஜி மிகவும் நெருக்கமாகி உள்ளார்..
பியூட்டிபார்லர்: ஒருகட்டத்தில் ராஜியின் பியூட்டி பார்லர் ரூமிலேயே இருவரும் தனிமையாக இருந்து வந்துள்ளனர்.. அப்படி உல்லாசமாக இருக்கும்போது, தன்னுடைய செல்போனில் போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார்.. பிறகு, 50 லட்சம் வேண்டும் என்று தாத்தாவிடம் மிரட்டி உள்ளார்.. நடுநடுங்கி போன தாத்தா, 50 லட்சம் மொத்தமாக தர முடியாத சூழல் இருப்பதாக சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக பணம் தந்துள்ளார்.. 3 லட்சம் ரூபாய் வரை ராஜிக்கு தந்தார்.
ஆனால், அதற்குமேல் பொறுமை இழந்த தாத்தா, நேரடியாக குந்நங்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டார்.. இதற்கு பிறகு, ராஜியை விசாரணை வளைத்துக்குள் கொண்டுவந்தனர். யாரெல்லாம் வசதியானவர்கள், சபலபுத்தி உடையவர்கள் என்பதை நோட்டமிட்டு, அவர்களை பற்றி தகவலை ராஜியிடம் சொல்லி, அவர்களை அறிமுகம் செய்துவைப்பாராம் ராஜியின் ஆண் நண்பர்.
ஆன்லைன் மோசடி: இது தொடர்பான விசாரணை தீவிரமான நிலையில், ஆன்லைன் மோசடிகளில் யாரும் நம்பி ஏமாற கூடாது என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
அப்படியிருந்தும், இதோ இன்னொரு தாத்தா, சபலத்தில் விழுந்துள்ளார்.. இந்த தாத்தாவுக்கு 82 வயசாகிறது.. இவரும் கேரளாவை சேர்ந்தவர்தான்.. திருவனந்தபுரம் பட்டோம் பகுதியின் பொட்டகுழி என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த தாத்தாவுக்கென்று யாருமே இல்லை... அதனால், தனியாக வசித்து வந்துள்ளார். இதை ஒரு மர்மகும்பல் கவனித்துவிட்டது.
அதனால், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியன்று, 2 இளம்பெண்களை, தாத்தா வீட்டுக்கு அனுப்பி ஆழம் பார்த்துள்ளது.. இந்த 2 பெண்களும் தாத்தா வீட்டுக்கு போனார்கள்.. அந்த பகுதியில் எங்காவது வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று விசாரித்துள்ளனர்.. பிறகு, தங்களது பெயர் ஸ்ரீஜா மற்றும் அமினா என்று தாத்தாவிடம் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.
இளம்பெண்கள்: இளம்பெண்கள் வீடு தேடி வந்ததும், தாத்தா திக்குமுக்காடிப்போய்விட்டார்.. தன் வயதை மறந்து, அந்த பெண்களிடம் வழிந்திருக்கிறார். இந்த பெண்களும், தாத்தா வீட்டிலேயே உட்கார்ந்து, அவரிடம் நெருக்கமாக பேச துவங்கிவிட்டார்கள்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அந்த வீட்டிற்குள் 2 பேர் திடுதிப்பென்று நுழைந்தனர்.. கத்தியை காட்டி, தாத்தாவை மிரட்ட ஆரம்பித்தனர்.. பிறகு, தாத்தாவின் ஆடைகளை அகற்றினார்கள்..
அந்த 2 பெண்களுடன் நெருக்கமாக இருப்பதுபோல போட்டோக்கள், வீடியோக்களை எடுத்துக்கொண்டார்கள்.. பிறகு, மறுபடியும் தாத்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து, ரூ.30 ஆயிரம் வேண்டும் என்று கேட்டார்கள்.
30 ஆயிரம் ரூபாய்: 30 ஆயிரமா? அவ்வளவு காசு தன்னிடம் கையில் வைத்திருக்கவில்லையே என்று தாத்தா கதறினார்.. அப்படியானால், பேங்க் செக் தந்து, அதில் கையெழுத்து போடும்படி சொன்னார்கள்.. தாத்தாவும் கையெழுத்து போட்டார்.. உடனே, சூட்டோடு சூடாக, பக்கத்திலிருக்கும் எஸ்பிஐ பேங்குக்கு சென்று, அந்த செக்கை மாற்றிக்கொண்டு, பணத்துடன் எகிறி தப்பி விட்டனர்.
இதற்கு பிறகும் தாத்தாவை அந்த கும்பல் நோட்டமிட்டுள்ளது.. தாத்தா போலீசுக்கு போகிறாரா? இல்லையா? என்று கவனித்தது.. தாத்தா போலீசுக்கு போகவில்லை என்பது உறுதியானதும், மறுபடியும் ஆகஸ்ட் 25ம் தேதி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்..
அப்போது, அவரிடமிருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துக் கொண்டு, மறுபடியும் 2 செக் தந்து கையெழுத்து போடும்படி கேட்டிருக்கிறார்கள். இந்த முறை, 5 லட்ச ரூபாய்க்கு கையெழுத்து கேட்டுள்ளார்கள்.. இதைத்தவிர, பிளாங்க் செக் அதாவது தொகை குறிப்பிடப்படாமல், மேலும் 4 செக்குகளை தந்து, கையெழுத்து வாங்கி கொண்டனர்.
தவணை முறை: இப்போது, தவணை முறையில் மிரட்டல் ஆரம்பமானது. இதற்கு பிறகுதான் தாத்தா உஷாரானார்.. அப்போதுகூட நேரடியாக போலீசுக்கு போகவில்லை.. ஒரு கும்பல் தன்னிடம் பணம் பறிப்பதாக சொல்லி, தன்னுடைய நண்பர் வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டார்.. அந்த வழக்கறிஞர், உடனே இதுகுறித்து போலீசில் புகார் தருமாறு அறிவுறுத்தியிருக்கிறார்..
அதற்கு பிறகுதான், போலீஸ் ஸ்டேஷனுக்கு தாத்தா போனார்.. இப்போது, அந்த கும்பல் எங்கே என்று தெரியவில்லை.. போலீசாரும், அந்த 2 பெண்கள், 2 ஆண்களை தேடி கொண்டிருக்கிறார்கள். மிரட்டி பெறப்பட்ட கையெழுத்திட்ட செக் குறித்து பேங்க் மூலமான நடவடிக்கைக்கும் போலீஸார், தாத்தாவுக்கு உதவிசெய்திருக்கிறார்கள்.
பேரதிர்ச்சி: ஆனாலும், 2 இளம் பெண்களிடம் அசடுவழிந்து, இப்படி ஏமாந்துவிட்டோமே என்ற அதிர்ச்சியில் இருந்து, தாத்தா இன்னும் மீளவில்லையாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications