"இயேசப்பா.. இன்னும் எனக்கு கல்யாணமே ஆகலயே".. நைட் நேரத்தில் சர்ச்சில்.. யார் இவர்? என்னாச்சு பாருங்க
திருவனந்தபுரம்: இருட்டு நேரத்தில் பைக்கில் வந்த நபர் செய்த காரியம், கேரள மாநிலத்தையே அதிர வைத்து கொண்டிருக்கிறது. என்ன நடந்தது ? யார் இவர்?
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது கட்டப்பனா என்ற பகுதி.. இங்கிருந்து கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கம்பம்மெட்டு என்ற ஊர்.

இந்த பகுதியில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்தான்.. அதிலும், சாலையோரங்களில் ஏராளமான சர்ச்கள் வழிநெடுகிலும் காணப்படும்.. சின்ன சின்ன தேவாலயங்கள் என்றாலும், இந்த பகுதி மக்களால் பெரிதும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அதிர்ச்சி: இந்நிலையில், கடந்த மார்ச் 12ம் தேதி, இந்த பகுதியிலிருக்கும் சர்ச்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட ஒரே ஏரியாவில், ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட சர்ச்களின் மீது கல்லெறியப்பட்டுள்ளது... இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. மறுநாள் காலையில் சர்ச்சுக்கு வந்தவர்கள், இப்படி ஒரு காரியத்தை செய்திருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
சர்ச்சுகளில் வைக்கப்பட்டிருந்த மாதா உருவங்கள், கடவுளரின் படங்கள் சேதமாகி கிடந்தன.. கண்ணாடி பெட்டகங்கள் அனைத்துமே சுக்குநூறாக நொறுக்கப்பட்டிருந்தன. இதனால் தேவாலயங்கள் சார்பில் உடனடியாக வந்தன்மேடு போலீசுக்கு புகார் தரப்பட்டது.. போலீஸாரும் இதுகுறித்த வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியிலிருக்கும் எல்லா சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர்.
கல்வீசி தாக்குதல்: அப்போதுதான், ஒரு நபர் பைக்கில் வந்து, ஒவ்வொரு சர்ச் வாசலிலின் முன்பும் பைக்கை நிறுத்துவதும், கற்களை சர்ச்சுக்குள் வீசி எறிந்துவிட்டு, பைக்கில் தப்பி செல்வதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அந்த வீடியோவிலிருந்த பைக்கின் நம்பரை வைத்து, சம்பந்தப்பட்டவரின் முகவரியை தேடி கண்டுபிடித்தனர்.
சம்பந்தப்பட்டவர் பெயர் செருக்குன்னில் ஜோபின் ஜோஸ் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் நேரடியாகவே அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.
விசாரணை: பிறகு அவரிடம் விசாரணையையும் மேற்கொண்டார்கள்.. ஜோஸூக்கு 35 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்.. 25 வயதிலிருந்தே கல்யாணம் செய்ய, ஆசையாக இருந்திருக்கிறார்.. அப்போதிருந்தே பெண் தேடி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொருமுறையும் பெண் பார்க்க சென்று, பெண்ணையும் பிடித்துப்போய் கல்யாணமும் நிச்சயம் செய்யப்படும். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால், அந்த திருமணம் கடைசி நேரத்தில் தடைபட்டுவிடுமாம்.
இதனால் ஜோஸ் ரொம்பவே நொந்து போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும் தன்னுடைய கல்யாணம் தடைபடுவதற்கு காரணமே, அந்த கடவுள்தான் என்று உறுதியாக நம்பியிருக்கிறார்.. இதனால் கடவுள் மீது கோபம் வந்துவிட்டது.
வாக்குமூலம் : நல்ல காரியம் செய்ய விடாமல் தடுக்கும் கடவுள் மீது தன்னுடைய கோபத்தை காட்ட நினைத்தாராம். அதனால்தான், சாலையோரம் இருந்த இந்த தேவாலயங்களின் மீது அவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்... அப்பறமென்ன? கல்யாணம் ஆகாமலேயே இப்போது 'மாமியார்' வீட்டுக்கு போய்விட்டார் ஜோஸ்..!!
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications