பல வருஷம் கழிச்சு வந்து வனமகன், பார்த்த உடன் ஓடி வந்து பாசத்தை பொழிந்த யானைகள்.. நெகிழ வைத்த வீடியோ
சென்னை: நீண்ட நாளைக்கு பின், தன் பாகனை பார்த்த உடன் ஓடி வந்து யானைகள் பாசத்தை பொழிந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. யானைகள் தனக்கு உதவியர்களையும், தனக்கு அன்பு காட்டியவர்களையும் எவ்வளவு நாள் ஆனாலும் மறப்பத்தில்லை என்பதை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.
பார்ப்பதற்கு மிகப்பெரிய மற்றும் மிக அதிக எடையுள்ள முரட்டு விலங்காக தோன்றும் யானைகள், பாசம் வைத்தால் பச்சக்குழந்தைகளை போல் நடந்து கொள்ளும் தன்மை உடையவை.. தன் மீது பாசம் வைத்து தன்னை அன்பாக பார்த்து கொள்பவர்களிடம் குழந்தை போல் மாறி பாசத்தை பொழியும். அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும். அவர்களை காணாவிட்டால் கண்டிப்பாக ஏங்கும்.

யானைகள் பொதுவாக கூட்டமாக வாழக்கூடியவை. அவை உறவுகளை பிரிந்து தனியாக சுற்ற வேண்டிய நிலை வந்தால் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும். பொதுவாக கூட்டமாக செல்லும் யானைகள் எந்த பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாது. ஆனால் தனியாக ஒற்றை யானையாக சுற்றும் காட்டு யானைகள் மிகவும் ஆபத்தானவை.
தனக்கு வேண்டி கரும்பு, வாழைப்பழம் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பிடித்தமான உணவுப்பொருட்களை லாரிகள் ஏற்றி செல்வதை தொலைவிலேயே மோப்பம் பிடிக்கும் யானைகள், பசி எடுத்தால் சாலைகளில் செல்லும் லாரிகளிடம் இருந்து வேண்டிய உணவுகளை பறித்தக் கொள்ளும். அதேபோல் கோபமூட்டும் வகையில் வாகன ஓட்டிகள் நடந்து கொண்டால், திருப்பி கடுமையாக தாக்கவும் தயங்காது. கார்களை, லாரிகளை, பேருந்துகளை கூட தாக்கும். இருசக்கர வாகனத்தில் யானைகள் நடமாட்டம் உள்ள மலைப்பகுதிகளில் செல்வது மிகவும் தவறானது.
ஆசிய யானை மற்றும் ஆஃப்ரிக்க யானை என இரண்டு வகையில் யானைகள் இருக்கின்றன. இதில் பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. மனிதனை போலவே இன்றும் யானைகள் தாய்வழிச் சமூகமாகவே வாழ்கின்றன. இதில் பெண் யானைகள் தான் கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றன. இடம் விட்டு இடம் நகரும்போதும் கூட முதலில் பெண் யானைகளே முன்னால் சென்று வழிகாட்டுகின்றன. அதனைப் பின்தொடர்ந்துதான் மற்ற யானைகளும் செல்வது வழக்கமாக உள்ளது. குழந்தைகள் தன் தாயின் கைகளைப் பிடித்து நடப்பது போல, யானைக் குட்டிகளும் தன் தாய் யானையின் வால்களைப் பிடித்து நடக்கும்.
Elephant caretaker returns after years away and his elephants run towards him pic.twitter.com/8GPr13JjtX
— Historic Vids (@historyinmemes) February 5, 2024
யானைகள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ளும் திறன் கொண்டவை. நாம் எப்படி பேசுகிறோமே அதே போன்றே யானைகளும் தங்களுக்குள் செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் விதமாக, முனகல்கள் முதல் உரக்க பிளிறுதல் வரை பலவிதமாக பேசுகின்றன.
நம்மை போன்றே யானைகளுக்கும் ஞாபகசக்தி கூடுதலாக இருக்கின்றன. யானைகளிடம் நன்கு பழகிவிட்டு, பத்து இருபது வருடங்கள் கழித்து சென்று அதைச் சந்தித்தால், நம்மை அடையாளம் கண்டுகொள்ளும் ஆற்றல் உடையது. அப்படித்தான் யானைக்கூட்டம் தனது பாகனை பல வருடங்கள் கழித்து அடையாளம் கண்டு அவர் மீது பாசத்தை பொழிந்துள்ளன. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications