ஆலப்புழாவை விடுங்க.. நம்ம கடலூர் கிட்ட சுவர்க்கமே இருக்குதுங்க! உலகிலேயே 2வது பெரிய.. டூர் போலாமா
கடலூர்: ஆலப்புழா உப்பங்கழியை ரசிப்பதற்காக கேரளாவுக்கு படையெடுக்கும் தமிழ் மக்கள் பலருக்கு கடலூரில் அமைந்து இருக்கும் இயற்கையின் பரிசு நினைவுக்கு வருவதில்லை. என்ன அது? அங்கு எப்படி செல்வது? விரிவாக பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அந்த சுவர்க்க பூமியைதான் நாம் பார்க்க இருக்கிறோம். சிதம்பரத்தில் இருந்து 30 நிமிடங்களுக்குள் இங்கு நீங்கள் சென்றடைந்துவிடலாம். அப்படி என்னதான் அது? அதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா?

உலகிலேயே 2 வது பெரிய சதுப்பு நிலக்காடான பிச்சாவரம் பற்றிதான் நாம் இன்று பார்க்க உள்ளோம். ஒருபக்கம் வெள்ளாற்றையும் மறுபக்கம் கொலரூன் ஆற்றையும் எல்லைகளாக கொண்ட இந்த பிச்சாவரம் உப்பங்கழியின் அழகை வர்ணிக்க உகந்த வார்த்தைக்கு பல நூற்றாண்டுகால தமிழ் அகராதியை புரட்டிப்பார்க்க வேண்டும்.
அத்தனை அழகை தன்னகத்தே கொண்டிருக்கிறது பிச்சாவரம். இதன் வசீகரிக்கும் அழகு, சூழலை காண இந்தியா மற்றும் வெளிநாட்டு பறவைகளே பல ஆயிரம் மைகள் பறந்து பிச்சாவரத்துக்கு வந்து செல்கிறது என்றால் பாருங்களேன். இங்கு நீங்கள் சென்றால் அந்த பறவைகளின் அழகையும் சேர்த்து ரசிக்கலாம்.

ரம்மியமான உப்பங்கழிகள், சில்வர் பீச்சுகள் என உங்கள் விடுமுறையை கொண்டாட்டமாக கழிக்க பிச்சாவரம் சரியான தேர்வாக அமையும். நகர பரபரப்புகளுக்கு மத்தியில் காடும், நீரும் கொண்ட அமைதியாக இப்பகுதியில் மனதை மயக்குவதுடன், திகிலூட்டும் சுவாரஸ்ய அனுபவத்தையும் உங்களுக்கு நிச்சயம் வழங்கும்.
அமைதியின் பொக்கிஷம் என்று வர்ணிக்கப்படும் இந்த பிச்சாவரத்தில் பறவைகளின் கீச் சத்தங்களும், நீரோட்ட ஒலிகளும் உங்கள் காதுகளுக்கு மருந்தாக மாறும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குளித்து மகிழ்வதுடன், அமைதியான நீரில் படகில் பயணம் செய்கிறார்கள். வெயில் அதிகமாக இருந்தால் சதுப்பு நில நிழலில் உங்களால் ஓய்வெடுக்க முடியும்.

இயற்கையையும், பறவைகளையும் விரும்புவோராக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமையும். நீங்கள் இதுவரை பார்த்திராத, கேள்விப்படாத அத்தனை வகை பறவைகளை கண்டு மெய்சிலிர்த்து போவீர்கள். மீன் கொத்தி பறவைகள் தொடங்கி ஃபெலிகன் எனப்படும் கூழைக்கடா பறவை வரை எண்ணிலடங்கா பறவைகளுக்கு பிச்சாவரம் இடமளித்து உள்ளது.
இங்கு படகு சவாரி செய்து சதுப்பு நிலங்களின் சாகச உணர்வை அனுபவிப்பதுடன், உப்பங்கழிகளை ஆராயலாம். நீரில் படகில் மிதந்துகொண்டு இருக்கும் உங்களை நாலாபுரமும் சூழ்ந்து நிற்கும் சதுப்பு நிலக்காடுகளின் மரங்கள் ஏதோ சுவர்க்கத்தில் இருப்பதை போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு சவாரி வசதியை வழங்குகிறது. நகர பரபரப்பில் இருந்து விடைபெற்று வார விடுமுறையில் குறைந்த பட்ஜெட்டுக்குள் நிறைவான சுற்றுலா பயணத்தை அனுபவித்திட உங்களுக்கு சரியான தேர்வாக இந்த பிச்சாவரம் அமையும். இங்கு வந்து சென்ற பிறகு நிச்சயம் மற்றவர்களுக்கும் நீங்கள் இவ்விடத்தை பரிந்துரை செய்வீர்கள்.
அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பிச்சாவரத்தை பார்வையிடுவதற்கு சரியான காலமாகும். அதன் முழு சுகத்தை இந்த காலத்தில் அனுபவிக்கலாம். பிச்சாவரத்துக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. சாலைகள் இணைப்புகளும் உள்ளன.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இப்படியா ஆகணும் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications