டூர் போனதை வீடியோ எடுத்து.. யூடியூப்பில் போட்டவர் மீது பாய்ந்த வழக்கு.. இப்படி கூட நடக்குமா.. கவனம்!
அந்தமான்: பொதுவாக நாம் சுற்றுலா செல்லும் போது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்தையும் வீடியோவாக எடுப்பார்கள். எல்லா கேங்கிலும் நிச்சயம் இதுபோல ஒருவர் இருப்பார். அந்தமானில் அப்படி தான் ஒரு ஜோடி ஆசையாக வீடியோ எடுத்து அதை யூடியூப்பில் போட்ட நிலையில், இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு வரை செய்யப்பட்டுள்ளது. ஏன் அப்படி.. அவர்கள் செய்த தவறு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதி இருக்கும். சுற்றுலா செல்லும் போது அந்த விதிகளை நாம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்வோம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

சுற்றுலா: அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்குத் தனது குடும்பத்துடன் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். டூரில் அந்தமான் பகுதிகளை ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் யூடியூப் பக்கத்தில் சுற்றுலா குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த ஒரு செயல் தான் அவர்கள் மீது வழக்கு பாயக் காரணமாக அமைந்துள்ளது.
அதாவது அவர்கள் அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடியின மக்கள் தொடர்பான காட்சிகள் இருக்கும் வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்காகவே அந்தமான் அதிகாரிகள், அந்த யூடியூப் சேனல் மீது வழக்குப் போட்டுள்ளனர்.
ஜாரவா பழங்குடியினர்: ஜாரவா பழங்குடியினர் பாதுகாக்கப்பட்ட சமூகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்ட விரோதமாகப் படம்பிடித்து, யூடியூப்பில் பதிவேற்றியதற்காக யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள கடமதாலா காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடியினரின் பாதுகாப்பு (திருத்தப்பட்ட) ஒழுங்குமுறை சட்டம், 2012இன் பிரிவுகள் 8(4) மற்றும் 8B ஆகியவை கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் | பழங்குடி ஜாரவாவை சந்திக்கவும் என்று அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ விதிகளை மீறும் வகையில் இருப்பாகப் பழங்குடியினர் நல உதவி இயக்குநருக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜாரவா சமூகத்தினர் தனியுரிமையைப் பாதுகாக்கவும் அவர்கள் மீதான சுரண்டலைத் தடுக்கவும் கடுமையான விதிகள் உள்ள நிலையில், அதை மீறும் வகையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகப் பழங்குடியினர் நல உதவி இயக்குநர் தெரிவித்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவும் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
முதல்முறை இல்லை: அதேநேரம் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2023 ஜனவரி மாதம் பிரபல யூடியூபர் சஞ்சய் குமார் சுவாமி அந்தமான் சென்றிருந்த போது, அவர் ஜராவா பழங்குடியின மக்களை இருக்கும் இடத்திற்குச் சுற்றுலா சென்று அதை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இதைச் சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஜாரவா பழங்குடியினரின் வீடியோ எடுப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோல வீடியோ எடுத்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதி இருப்பது தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் ஜாலியாக வீடியோ எடுத்துச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். எனவே, நீங்கள் அந்தமானுக்கு சுற்றுலா போவதாக இருந்தால் இந்த விதியை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications