சொந்த காசில் சூனியம்! மாலத்தீவு எடுத்த முடிவால் லட்சத்தீவுக்கு திடீரென கிடைத்த மவுசு! என்னனு பாருங்க
மாலே: இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்கு வர அனுமதி கிடையாது என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இஸ்ரேலிய நாட்டு சுற்றுலாப்பயணிகளை இந்தியாவில் உள்ள அழகிய கடற்கரைகள் வரவேற்கின்றன என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் தங்கள் நாட்டவர்களை வலியுறுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு. அந்த நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு வெற்றி பெற்றார். அப்போது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முகம்மது முய்சு மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தது கடும் கொந்தளிப்பதை ஏற்படுத்தியது. இனவெறியுடன் மோடியை விமர்சித்ததற்கு இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்த இந்திய சுற்றுலாப்பயணிகள் பலரும் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
இதனால் ஆடிப்போன மாலத்தீவு உடனடியாக அந்த அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கியது. ஆனாலும், இந்தியாவை சீண்டும் விதமாக மாலத்தீவு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து முழுமையாக வெளியேறியே தீர வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். மேலும், அவ்வப்போது இந்தியாவைத் தாக்கும் வகையிலான கருத்துகளையும் கூறி வந்தார்.
இதற்கிடையே இப்போது இஸ்ரேல் மாலத்தீவு இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டிக்கும் விதமாக இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த நேற்றைய தினம் முய்சு தலைமையிலான மாலத்தீவு அரசு முடிவு செய்தது. இது தொடர்பான தகவல் வெளியான உடனேயே தற்போது மாலத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "மாலத்தீவு கொண்டு வர உள்ள சட்டத் திருத்தங்களால் தற்போது அங்குள்ள இஸ்ரேல் மக்கள் சிக்கலை எதிர்கொள்ளலாம். இதனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவது எங்களுக்குக் கடினமாக இருக்கும்.. எனவே இப்போதே மாலத்தீவில் உள்ள இஸ்ரேல் நாட்டவர் அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியது.
இதற்கிடையே, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் உள்ள அழகான கடற்கரைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கேரளா, கோவா, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளை பகிர்ந்துள்ளன. அந்த பதிவில் மாலத்தீவு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அழகான கடற்கரைகளுக்கு செல்லலாம் என பதிவிட்டுள்ளது.
அடுத்த சர்ச்சை.. மொத்தமாக தடை விதிக்கும் மாலத்தீவு.. கொந்தளிக்கும் இஸ்ரேல்.. என்ன காரணம்! பரபர தகவல்
மாலத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். இந்தச் சூழலில் இஸ்ரேலியர்களுக்கு தடை விதிக்கும் வகையிலான முடிவை மாலத்தீவு எடுத்துள்ளது. மாலத்தீவு நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 5 லட்சம் தான்.
தீவுகளின் கூட்டமான மாலத்தீவில் முஸ்லீம் மக்கள் தொகையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் அந்த நாட்டிற்கு தற்போதைய நடவடிக்கையால் வருவாயில் பெரும் பாதிப்பு நேரிடலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications