மறையூரை தாண்டி மறைந்திருந்து பார்க்கும் காந்தக் கண்ணழகி.. தமிழர்கள் வாழும் குட்டி காஷ்மீர்
மூணாறு : மூணாறு போனால், மறையூரை தாண்டி மறைந்திருந்து பார்க்கும் காந்தக் கண்ணழகியான காந்தளூரை மிஸ் பண்ணிடாதீங்க.. குட்டி காஷ்மீர் போல் இருக்கும் இந்த ஊரில் வாழும் 90 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவார். கேரளாவில் உள்ள தமிழ் கிராமமான இங்கு ஒரு நாள் தங்கி சுற்றி பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டை ஒட்டி கேரளாவிலும் ஏராளமான கோடைக்கால சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது. மிக பழமையான மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த சுற்றுலா தலங்கள் எல்லாமே இருக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக அற்புதமான விஷயம் என்று சொல்வது என்றால், ஒரு மலையின் இந்த பக்கம் கொடைக்கானல் சூப்பர் சுற்றலா தலம் என்றால், அப்படியே அந்த பக்கம் மூணாறு சூப்பரான சுற்றுலாத் தலம் ஆகும்.

மூணாறு போக தேனி மாவட்டம் வழியாக செல்வது எளிது என்றாலும் உடுமலைப்பேட்டை வழியாகவும் வரலாம். உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு புறப்பட்டால், மறையூரை அடுத்து வண்டியை திருப்பினால் ஒரு அற்புதமான ஓரு சுற்றுலாத்தலத்தை பார்க்க முடியும். அதுதான் காந்தளூர். இந்த ஊர் இடுக்கி மாவட்டம், மூணாறுக்கு அருகில் தேவிகுளம் தாலுக்காவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் ஆகும்.
இது கிராமம் என்றாலும், இந்தியாவின் மிக பிரபலான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் குளிர் நிறைந்த காந்தளூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குட்டி காஷ்மீர் போல் அழகு நிறைந்த காந்தளூருக்கு செப்டம்பர் முதல் மார்ச் வரை சுற்றிப்பார்க்க அருமையான காலக்கட்டம் ஆகும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக கொண்டு காந்தளூர் அமைந்துள்ளது. 90 சதவீத மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது, மீதமுள்ளவர்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்கள் ஆவார்.. இது ஏன், தேக்கடி முதல் தேவிகுளம், மூணாறு உள்பட இடுக்கி மாவட்டத்தின் பாதி பகுதிகள் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இன்றும் வாழ்கிறார்கள். காந்தளூரை பொறுத்தவரை தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்றாக ஆப்பிள் விளைகிறது. ஆப்பிள் தென்னிந்தியாவில் அதிகம் பயிரிப்படும் ஊராக காந்தளூர் இருக்கிறது. ஆப்பிள் தவிர பீன்ஸ், முட்டகோஸ், காலிஃப்லவர், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு போன்ற காய்கறிகள் அதிகம் பயிரிடப்படுகிறது. பழங்களை பொறுத்தவரை ஆப்பிளை போல், ஆரஞ்சு, மாதுளை, பலாப்பழம், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்கள் பயிரிடப்படுகின்றன.

மூணாறில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள காந்தளூர் கிராமத்தில் கண்டிப்பாக சுற்றிபார்க்க வேண்டிய இடம் என்றால், மன்னவன் சோலை (ஆணைமுடி சோலை தேசிய பூங்கா), பட்டிச்சேறி அணை, ஆப்பிள் தோட்டம், குழச்சிவயல் சூட்டிங் பாறை, இராமர் குகைக்கோவில் போன்றவற்றை குறிப்பிடலாம். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் மிக அடர்ந்த வனப்பகுதியாக காந்தளூர் இருக்கிறது. இங்கு காந்தளூர் அருவி, தூவானம் அருவி, பிரம்மரம் வியூ பாய்ண்ட், பில்லர் ராக்ஸ் வியூ பாய்ண்ட், போட்டோ பாய்ண்ட், வட்டவடா அழகு பாய்ண்ட் என ஏராளமான இடங்கள் உள்ளன.

காந்தளூரை பொறுத்தவரை மழைக்காலங்களில் மிகமிக கனமழை பெய்யும் பகுதியாகும். இங்கு வெப்ப நிலைய பொறுத்தவரை 15 டிகிரி முதல் அதிகபட்சம் 25 டிகிரி வரை தான் இருக்கும். கோடைக்காலங்களில் தான் அதிகபட்சமாக எப்போதாவது 25 டிகிரி வெப்ப நிலை இருக்கும். பழங்களின் பூமியாக பார்க்கப்படும் காந்தளூரை அடைய, சென்னையில் உள்ளவர்கள் பழனி எக்ஸ்பிரஸ் ரயிலி ஏறி வர வேண்டும். உடுமலைப்பேட்டை ரயில நிலையத்தில் இறங்கிய, அங்கிருந்து உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் வந்து காந்தளூருக்கு பேருந்தில் ஏறலாம். அங்கு மறையூர், காந்தளூரில் ஏராளமான சுற்றுலா தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும் உடுமலைப்பேட்டையிலேயே கார் பிடித்து போயும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம்.. இந்தியாவின் எங்கிருந்தும் ரயில் மூலம் கோவையை அடைந்து அதன்பிறகு உடுமலைப்பேட்டை வந்து காந்தளூருக்கு வர முடியும். ஆப்பிள் கண்ணங்களால் சூழ்ந்த காந்தக்கண்ணழகியான காந்தளூர் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். போய் பாருங்கள்.












Click it and Unblock the Notifications